ஆரோக்கியம் தரும் 'நீச்சல்'

நீச்சல் நல்லதொரு பொழுதுபோக்கு மட்டுமல்ல.. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த உடற்பயிற்சியும் கூட. நீச்சல் தரும் பயன்கள் ஏராளம்.
ஆரோக்கியம் தரும் 'நீச்சல்'


நீச்சல் நல்லதொரு பொழுதுபோக்கு மட்டுமல்ல.. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த உடற்பயிற்சியும் கூட. நீச்சல் தரும் பயன்கள் ஏராளம். உடலுக்கும் மனதுக்கும் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது.

நடைப்பயிற்சி, ஜாகிங், நடனம் என அனைத்தையும் விட எளிதாகவும், விரைவாகவும் கலோரியை எரிக்க, நீச்சலைத் தவிர வேறு சிறந்த பயிற்சி இருக்க முடியாது. உடலில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து நல்ல உடல் தோற்றத்தையும் தருகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

நீச்சல் கற்றுக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. அரை மணி நேரம் நடைப்பயிற்சி 200 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அரை மணி நேரம் சைக்கிகளில் சென்று வருவது 150 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஆனால்  அரை மணி நேரம் நீச்சல் பயிற்சியினால் 350க்கும் மேற்பட்ட கலோரிகள் எரிக்கப்படுகின்றன. 

நடைபயிற்சியின் போதும், ஜாகிங் செய்யும் போது உடலின் கீழ் பகுதி தான் வேலை செய்கிறது. நீந்தும் போது உடலின் எல்லா தசைகளும் வேலை செய்கிறது. கை-கால் மற்றும் தொடைப் பகுதியில் உள்ள தசைகள் வலிமை அடைகிறது.

இதயம் மற்றும் நுரையீரல் நன்கு வேலை செய்ய வைக்கிறது. உடலில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்த அளவை நீச்சல் கட்டுப்படுத்துகிறது.

மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் நீச்சல் பயிற்சியின் பங்கு அதிகம்.

நீச்சல் உடல் பருமனை விரட்டும். நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும். 1 மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும். உடலின் எல்லா பாகங்களும் வலுப்பெறும். 

காற்றை விட நீர் அடர்த்தியானது என்பதால் தரையில் உடற்பயிற்சி செய்வதை விடவும் 44 மடங்கு அதிகம் தசை இறுகும். நரம்பு மண்டலம் சீராகும். நன்கு பசி எடுக்கும். நல்ல தூக்கம் வரும்.

மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் நீச்சலை அனைவரும் கற்று கொள்வது நல்லது.

காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது. நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும் தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com