சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா

ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி எண்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து "புரொடக்ஷன் நம்பர் 1' என்ற பெயரில் புதிய படத்தை
சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா


ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி எண்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து "புரொடக்ஷன் நம்பர் 1' என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கின்றன. இதனை "லாக்கப்' திரைப்படத்தின் இயக்குநர் சார்லஸ் இயக்குகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன்  லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார். படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com