கரையும் தீவு

உலக வெப்பமயமாதல் காரணமாக வட மற்றும் தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் கணிசமான அளவு உருகிக் கொண்டிருக்கின்றன.
கரையும் தீவு

உலக வெப்பமயமாதல் காரணமாக வட மற்றும் தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் கணிசமான அளவு உருகிக் கொண்டிருக்கின்றன. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் களுக்கு இடையே அமைந்துள்ள மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து. இது பற்றி தற்போது பலவிதமான செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

"நேஷனல் அகாதெமி ஆப் சயின்ஸ்'  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கிரீன்லாந்தின் மிகப்பெரிய பனி பாறைகளின் அடிப்பகுதி உருகும் வேகம் அதிகரித்திருக்கிறது. இதனால் கடல் மட்டத்தில் மாற்றங்கள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.  2020 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரீன்லாந்து தீவு குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்கள் நேரடி கள ஆய்வுகள்  மூலம் திரட்டப்பட்ட தகவல் அடிப்படையில் 1990- ஆம் ஆண்டை கணக்கிடும்போது கிரீன்லாந்து ஏழு மடங்கு  பனி உள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டியது. இதே போல் தொடர்ச்சியாக கிரீன்லாந்து பனியில் இருக்கும் பட்சத்தில் 2100 -ஆம் ஆண்டில் கடல் மட்டம் 10 சென்டிமீட்டர் அளவுக்கு உயர்ந்து கடலோர நகரங்கள் அனைத்தும் மூழ்கிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கிரீன்லாந்தில் பனிப்பொழிவு அளவை விட அங்குள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன. "ஒவ்வொரு பருவ காலத்திலும் இது   பலமடங்கு அதிகரிக்கிறது'  என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் பால் கிறிஸ்டோபர் சன்.  கிரீன்லாந்தின் நிலை சீராகவில்லை என்றால், கடல் மட்டம் உயரும் நிலப்பரப்பு சுருங்கும்.

2019-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் இந்த தீவை விலைக்கும் வாங்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com