தீப்பெட்டிக்குள் சேலை.!

தீப்பெட்டிக்குள் சேலை என்பது சாத்தியமா? சாத்தியமே என்கிறார் இளைஞர் ஒருவர். 
தீப்பெட்டிக்குள் சேலை.!

தீப்பெட்டிக்குள் சேலை என்பது சாத்தியமா? சாத்தியமே என்கிறார் இளைஞர் ஒருவர். 

சங்க காலங்களில்  மோதிரத்திற்குள்  நுழையும்  சேலை போன்ற ஆடைகள்  நெய்யப்பட்டன.  ஈராக்கில்  நெய்யப்பட்ட மஸ்லின் எனப்படும்  துணிவகை  மிகவும் மென்மையாகவும் உள்ளங்கைக்குள்   அடக்கிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு  நூல் இழைகள் மெலிந்து சன்னமாக இருக்கும். 

தெலங்கானாவைச் சேர்ந்த "நல்ல விஜய்'  என்னும் நெசவாளி தீப்பெட்டிக்குள்  அடங்கும் சேலையை நெய்துள்ளார். 

ஐந்தரை மீட்டர் நீளமுள்ள சேலையை மடித்து ஒரு  பெரிய தீப்பெட்டிக்குள்  வைத்துவிடலாம்.இந்த சேலை இயற்கையான பட்டு நூலால்  நெய்யப்பட்டது. இயற்கை சாயம் ஏற்றப்பட்டது. இந்த சேலையை உடுத்தவும் செய்யலாம்.

அமெரிக்க  அதிபர்  ஒபாமா  2015-இல் தன் மனைவியுடன் இந்திய வருகை தந்த போது  அவருக்கு  தீப்பெட்டியில்  ஒரு சேலையை வைத்து நல்ல விஜய் பரிசளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com