அழகிய காட்சிகளை வழங்கும் ரயில்வே! 

இந்திய ரயில்வே நாடு முழுவதும் பயணிகளுக்கு மிக அழகிய காட்சிகளை வழங்குகிறது.
அழகிய காட்சிகளை வழங்கும் ரயில்வே! 


இந்திய ரயில்வே நாடு முழுவதும் பயணிகளுக்கு மிக அழகிய காட்சிகளை வழங்குகிறது.

கேரளத்தின் வல்லபுழா ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயின் ஷோரனூர்-மங்களூரு பிரிவில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது முழுவதும் பசுமையான மரங்களால் மூடப்பட்டிருக்கும்.

பரோக் ரயில் நிலையம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் அமைந்துள்ளது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான கல்கா-சிம்லா ரயில்வேயில் அமைந்துள்ளது.

செருகரா ரயில் நிலையம் கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள செருகரா நகரத்துக்குச் சேவை செய்யும் ஒரு ரயில்வே நிலையமாகும், இது மழைக்காலங்களில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.

சிவோக் ரயில் நிலையம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் மேற்கு வங்கத்தின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

கத்கோடம் ரயில் நிலையம் ஹல்த்வானிக்கு அருகில் உள்ளது.  இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான உத்தரகண்டில் உள்ள நைனிடாலில் இருந்து 35 கி.மீ. தொலைவில் 
உள்ளது.

மேவார், மார்வாரை ஆரவல்லி மலைகள் வழியாக இணைக்கும் 22 கி.மீ. நீளமான மீட்டர்கேஜ் ரயில் பாதை கோரம் காட் பசுமையான ரயில் நிலையத்தை வழங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com