தெரியுமா..?

சிறையில் இருந்தபோது, பல பிரபலங்கள் நூல்களை எழுதியுள்ளனர்.


சிறையில் இருந்தபோது, பல பிரபலங்கள் நூல்களை எழுதியுள்ளனர். அவற்றில் சில:

"கீதை ரகசியம்' என்ற நூலை திலகர் எழுதினார்.
"மெய்யறிவு',  "மெய்யறம்', "மனம் போல் வாழ்வு' ஆகிய நூல்களை வ.உ.சி. சிறையில்தான் எழுதினார்.
தமது சுய சரிதையை சிறையில்தான் எழுதினார் ராஜேந்திர பிரசாத்.
"மணி மகுடம்' என்ற நாடகத்தையும், " சிறையில் பூத்த சின்னஞ்சிறு மலர்கள்' என்ற நூலையும் கருணாநிதி எழுதினார்.
அமெரிக்க மக்களுக்கு "சுதந்திரத்துக்குப் போராட வேண்டும்' என்ற நூலை பிரெஞ்சு நாட்டு சிறையில் இருந்தபோது, தாமஸ் பெயின் எழுதினார்.
"மெயின் கேம்ப்' என்ற நூலை "லாண்டஸ் பர்க்' சிறையில் இருந்தபோது, ஹிட்லர் எழுதினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com