குறும்படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்

குறும்பட உலகத்துக்கு  சர்வதேச அடையாளங்கள் வாங்கித் தருவதில்  இது இயக்குநர்  ஜூட் பீட்டர் டேமியானின் முறை. 
குறும்படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்


குறும்பட உலகத்துக்கு சர்வதேச அடையாளங்கள் வாங்கித் தருவதில் இது இயக்குநர் ஜூட் பீட்டர் டேமியானின் முறை.

இவர் இயக்கிய சஷ்தி என்ற குறும்படம் பல உலக மேடைகளை அலங்கரித்துள்ளது. 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்தக் குறும்படம் ஆகஸ்ட் 15-இல் ஐ ட்யூன்ஸ், கூகுள் பிளே ஆகியவற்றில் வெளியாகியுள்ளது. தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்தக் குறும்படம். தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் நிலைக்கு நினைக்கிறான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரை பற்றிய அவனுடைய அபிப்ராயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை அழகாக சொல்கிறது இந்த குறும்படம். இந்தப் படம் லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகியுள்ளது தனிச்சிறப்பு. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டோக்கியோ முதல் டொராண்டோ வரை , 25 திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது.

அடிப்படையில் ஒரு சார்டட் அக்கவுண்டன்ட் ஆன ஜூட் பீட்டர் டேமியான் கிட்டத்தட்ட அதே துறையில் 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா இயக்கம் மீது உள்ள ஆர்வத்தால் எல்வி பிரசாத் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படம் இயக்குதல் பற்றி கற்றுக்கொண்டவர். தனது முதல் படைப்பாக இந்த "சஷ்தி' என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com