விம்பிள்டன் போட்டியில் தமிழ் சொற்கள்...!

விம்பிள்டன் போட்டியில் தமிழ் சொற்கள்...!

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைகிறதோ, இல்லையோ? ஆனால் யு.எஸ்.  ஓபன் டென்னிஸ் தொடரின் ட்விட்டர் பக்கத்தில்  தமிழ் திரைப்படம் ஒன்றின் பிரபல   வசனம்  இடம் பிடித்துள்ளது.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைகிறதோ, இல்லையோ? ஆனால் யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் ட்விட்டர் பக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றின் பிரபல வசனம் இடம் பிடித்துள்ளது.
ஒரு மாதத்துக்கு முன் விம்பிள்டன் போட்டியின்போதும், தமிழ் படத்தில் பிரபல பாட்டின் முதல் வரி இடம்பெற்றது. இது தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல!
நியூயார்க்கில் "அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் 29-இல் தொடங்கி, செப்டம்பர் 11-இல் நிறைவுற்றது. இதன் விளம்பரம் ஒன்றில் மிகப் பிரபலமான தமிழ் திரைப்பட வசனமான "கட்டிப்புடி வைத்தியம்' என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
டென்னிஸ் வீரர்களான நோவாக் ஜோகோவிச், டேனி மெத்வெடேவ் நெருக்கமாக நின்று கிட்டத்தட்ட கட்டி அணைத்துக் கொள்ளும் படத்தை யு. எஸ். ஓபன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு "இந்தியர்களே.... உங்களது "கட்டிப்புடி வைத்தியம்' இங்கு நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் எப்போது நடைபெற்ற நிகழ்வு என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?' என்று கேள்வியையும் கேட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு (2021) யு எஸ் ஓபனின் இறுதிப்போட்டியில் நடைபெற்றது. அன்றையப் போட்டியில் ஜோகோவிச் டேனி மெத்வெடேவ்வை எதிர்த்து களம் இறங்கினார். ஜோகோவிச் அந்த ஒரே ஆண்டில் 3 டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் ஆகியிருந்தார். தனது 4ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக யு எஸ் ஓபன் போட்டியிலும் வெற்றிபெற அதிரடியாக ஆடினார். ஆனால் விதி வேறு கணக்கு போட்டிருந்தது.
ஜோகோவிச் அதிர்ச்சி அடையும் விதத்தில் டேனி தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு யு டர்ன் அடித்த "ஜோகோவிச்சை தோல்வி அடையச் செய்ததற்காக "என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தடாலடியாக டேனி அறிவித்தார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தின்போது, ஜோகோவிச், டேனி மெத்வெடேவ் வாஞ்சையுடன் கட்டி அணைத்துக் கொண்டனர். அந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட படம் அப்போது வைரலானது. அப்போது "கட்டிப்புடி வைத்தியம்' என்ற சொற்கள் இடம் பெறவில்லை. இப்போது கட்டிப்புடி வைத்தியம் வார்த்தைகளைச் சேர்த்து மீண்டும் யு எஸ் ஓபன் பொறுப்பாளர்கள் விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மீண்டும் அந்தப் படம் வைரல் ஆகியுள்ளது.
தமிழ் தெரிந்த டென்னிஸ் ஆர்வலர்கள் "யாரோ நம்ம ஆள் செய்த வேலை' என்று பதிவு போட்டுள்ளனர்.
சென்ற மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் எட்டு முறை சாம்பியனாக இருந்த ரோஜர் ஃபெடரர் பங்கு பெறவில்லை இருந்தாலும் போட்டிக்கு சிறப்புப் பார்வையாளராக வருகை தந்த ரோஜர் ஃபெடரர் படத்துடன் விஜய்யின் "மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற "வாத்தி கம்மிங்' என்று பாடல்வரியைத் தலைப்பு வாக்கியமாகப் போட்டு விம்பிள்டன் டென்னிஸ் டிவிட்டர் பக்கத்தில் பிரசுரித்திருந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com