இங்கிதம் தெரியுமா?
By நெ.இராமகிருஷ்ணன் | Published On : 11th December 2022 06:00 AM | Last Updated : 11th December 2022 06:00 AM | அ+அ அ- |

"இங்கிதம்' என்ற சொல்லுக்கு இனிமை என்பதே உட்பொருள். எண்ணக் குறிப்பு என்றும் அர்த்தமுண்டு. இதற்கு மாறாகப் பேசுபவர்களை "இங்கிதம் தெரியாதவர்' என்று கூறுவதுண்டு. வள்ளலார் "இங்கித மாலை' , "இங்கிதம் பத்து' என்ற பெயர்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.
நாடகங்களில் திரைச்சீலை அமைக்கும் முறை பார்சி நாடகக் குழுவினரால் தமிழகத்தில் அறிமுகமானது. இங்கு அறிமுகப்படுத்தியவர் சங்கரதாஸ் சுவாமிகள்.
காந்தியடிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்தபோது, பத்திரிகை நடத்தினார். அதன் பெயர் "இந்தியன் ஒப்பினியன்'. 4 பக்கங்கள் கொண்ட இந்தப் பத்திரிகையில் தமிழ், ஆங்கிலம், குஜராத், ஹிந்தி ஆகிய மொழிகளுக்கு தலா ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டது.