உயிர் தமிழுக்கு
By | Published On : 11th December 2022 06:00 AM | Last Updated : 11th December 2022 06:00 AM | அ+அ அ- |

சிம்புவின் "மாநாடு' படத்தின் மிகப் பெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் "ஏழுகடல் ஏழுமலை' மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் "ராஜாகிளி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து வரும் "உயிர் தமிழுக்கு' படத்தின் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார். மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப் படத்தை தயாரித்துள்ளதுடன் எழுதி, இயக்கியும் உள்ளார். இந்தப் படத்தில் அமீருடன் அமீர், சாந்தினி தரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்துக்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அசோக் சார்லஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். ""இன்றைய தலைமுறைக்கான அரசியல் என்பது, உலக மயமாக்கலுக்குப் பிறகான குழப்பமான அரசியல். அதை கலைந்து பார்ப்பதற்கான ஒரு களமாக இப்படத்தை பார்க்கிறேன். மண்ணைக் காப்பது தொடங்கி சர்வதேச அரசியலை எல்லாம் அவ்வளவு எளிமையாக உரையாடுவதுதான் திரைக்கதை. நம்முடைய விளையாட்டிலும் குடிக்கும் கோலாவிலும் அரசியல் உண்டு என்பது போன்ற எல்லாமும் அப்படியே பதிவாகியிருக்கின்றன'' என்றார் இயக்குநர் ஆதம் பாவா.