கனவை நிறைவேற்றிய சாக்ஷி
By DIN | Published On : 06th February 2022 06:00 AM | Last Updated : 06th February 2022 06:00 AM | அ+அ அ- |

ஒரு புத்தம் புதிய சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது நடிகை சாக்ஷி அகர்வாலுடைய தந்தையின் 22 வருட கனவாக இருந்தது. எனவே, தனது அப்பாவின் கனவைக் கேட்டு வளர்ந்த சாக்ஷி அகர்வால், தந்தையின் ஒரே நிறைவேறாத ஆசையை நிறைவேற்றுவதன் மூலம் 2022 ஆம் ஆண்டை ஓர் மன நிறைவுடன் தொடங்க முடியும் என தனக்குள் உறுதியளித்துக் கொண்டிருந்தார்.
தான் செய்யும் அனைத்தையும் விரும்பிய வண்ணம் செயல்படுத்திய அவர் தனக்கே உரிய பாணியில் புதிய மெர்சிடிஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது தேர்வாக ஒரு அழகிய லைட் கோல்ட் கலர் இ வகுப்பு காரினை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் இந்த சொகுசு கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.
"ஒரு நடிகையாக, இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த கனவுகளை நம்புவதற்கு தன்னுடைய இந்த வெற்றி உதவும் எனவும், தன்னால் இதைச் செய்ய முடிந்தால் நிச்சயம் ஒவ்வொருவராலும் இது முடியும்' என்று சாக்ஷி அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.