அருள்நிதியின் "தேஜாவு'

மாறுபட்ட கதைகளை தேர்வு செய்வதில் தனி முத்திரை பதித்து வருகிறார் அருள்நிதி.
அருள்நிதியின் "தேஜாவு'

மாறுபட்ட கதைகளை தேர்வு செய்வதில் தனி முத்திரை பதித்து வருகிறார் அருள்நிதி. அந்த வகையில் அவர் நடித்து வரும் "தேஜாவு' படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.

மிஸ்டரி த்ரில்லர் பாணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திரைக்கதையை அரவிந்த் ஸ்ரீநிவாசன் எழுதி இயக்குகிறார். மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. இதுதான் இந்த கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால், அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com