பல வசதிகளுடன் புதிய கார்...!

பாதுகாப்பு அம்சங்களில் அமெரிக்க அதிபர் பைடன் பயணிக்கும் "பீஸ்ட்' காரை விட மிகவும் பாதுகாப்பான மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 காரை இந்திய பிரதமர் மோடிக்காக சுமார் 12 கோடி ரூபாய்க்கு (வரிகள் தனி) இந்திய சிறப
பல வசதிகளுடன் புதிய கார்...!

பாதுகாப்பு அம்சங்களில் அமெரிக்க அதிபர் பைடன் பயணிக்கும் "பீஸ்ட்' காரை விட மிகவும் பாதுகாப்பான மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 காரை இந்திய பிரதமர் மோடிக்காக சுமார் 12 கோடி ரூபாய்க்கு (வரிகள் தனி) இந்திய சிறப்புப் பாதுகாப்புக் குழுவால் வாங்கப்பட்டுள்ளது. மோடி, இதுவரை பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள் கொண்ட ரேஞ்ச் ரோவர் வோக், டொயோட்டா லேண்ட் குரூஸர் போன்ற கார்களை பயன்படுத்தி வந்தார்.

டி பயன்படுத்தும் புதிய மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650கார் பேசும் பொருளாகியிருக்கிறது.

சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைச் சந்திக்க டெல்லி ஹைதராபாத் மாளிகைக்கு மோடி சென்ற போது புதிதாக வாங்கப்பட்டிருக்கும் மெர்செடீஸ் பென்ஸ்ஸின் மேபேக் எஸ்650 ரக காரில் பயணித்தார். அப்போதுதான் இந்தக் கார் இந்தியர்கள் கவனத்திற்கு வந்தது. தற்சமயம் இந்தியாவில் இந்த ரகக் கார் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது.

மோடியின் புதிய கார், பாதுகாப்பு எல்லையின் உச்சமான வி.ஆர். 10 குறியீட்டு அளவு வழங்கப்பட்டுள்ளது. எத்தனை வீரியமான வெடிகுண்டுகளால் தாக்கினாலும், ஏகே 47 போன்ற உயர் ரக துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முயற்சித்தாலும் கார் பாதுகாப்பாக இருக்கும். அசைந்து கொடுக்காது. காரினுள் பயணிப்பவர்களுக்கு சிராய்ப்பு கூட ஏற்படாது.

ரசாயன வாயுவைப் பீச்சி தாக்குதல் நடத்தினாலும், காருக்குள் தூய்மையான காற்று தானாகக் கிளம்பி மூச்சு திணறலிலிருந்து விஐபிகளைப் பாதுகாக்கும். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம். காரை அதிவேகத்திலும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க அதிநவீன வசதிகள் காரில் உள்ளன. காரின் டயர்கள் திடீரென்று பழுதானாலும், அந்த நிலையிலேயே சுமார் 30 கி.மீ பாதுகாப்பாகப் பயணிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com