செஸ்: புதிய மறுமலர்ச்சி

""மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது மிகவும் பெருமிதமாக உள்ளது. இந்தப் போட்டியால் இந்தியாவில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும்'' என்றார் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்.
செஸ்: புதிய மறுமலர்ச்சி

""மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது மிகவும் பெருமிதமாக உள்ளது. இந்தப் போட்டியால் இந்தியாவில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும்'' என்றார்முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்.

இந்தியாவில் செஸ்ஸூக்கு தனி அடையாளம்பெற்றுத் தந்தவர் சென்னையின் ஜாம்பவான் "விஷி' எனப்படும் விஸ்வநாதன் ஆனந்த். "செஸ் ஒலிம்பியாட் 2022' போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் தொடங்க உள்ள நிலையில், அவர் கூறியதாவது...:

செஸ் என்றால் விஸ்வநாதன் ஆனந்த் என்றஅடையாளமாகிவிட்டதே?

6 வயதிலேயே செஸ்ஸில் ஈடுபாடு கொண்டேன். 1980-ஆம் ஆண்டுகளில் மிகவும் வேகமாக ஆடக் கூடியவர் என்பதால் லைட்னிங் கிட் (மின்னல் குழந்தை) என்ற பெயருக்கு உரியவரானேன். மிகச் சிறந்த ரேபிட் செஸ் வீரர் என்ற பெருமையும் பெற்றேன். 5 முறை உலக சாம்பியனாக இருந்த நீங்கள் பெருமிதம்கொள்வது என்ன?

1988-இல் கிராண்ட் மாஸ்டராக இருந்தேன். இ.எல்.ஓ. ரேட்டிங் எனப்படும் தரவரிசையில் 2,800 புள்ளிகளுக்கு மேல் பெற்ற சில வீரர்களில் ஒருவராகவும் ஆனேன்.

2006, 2007, 2008, 2010, 2012 என 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றேன். இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான "ராஜீவ் கேல் ரத்னா', "பத்ம விபூஷண்' ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளேன்.

எனது வெற்றிகளால் செஸ் விளையாட்டுக்கு இந்தியாவில் புதிய எழுச்சி கிடைத்தது. மறக்க முடியாத அனுபவம்?

அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, பிரதமர் மன்மோகன் சிங் விருந்து வைத்தபோது, அழைக்கப்பட்ட ஒரே வீரர் நான் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு.

செஸ் போட்டி நடப்பது குறித்து...?

"செஸ்ஸின் மெக்கா' என அழைக்கப்படுவது சென்னை. இந்தியாவில் மொத்தம் உள்ள 70-க்கு மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்களில் 27-க்கும் மேற்பட்டோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இப்படி சிறப்புமிக்க சென்னையில் போட்டி நடப்பது பெருமையே!

"செஸ் ஒலிம்பியாட் 2022' நடத்தும் போட்டியை ரஷியாவிடம் இருந்து பறித்தது ஃபிடே. எந்த நாட்டில் நடத்தலாம் என ஆலோசனை நடந்தது. போட்டியின் நிலை குறித்து நாங்கள் ஃபிடேவிடம் கேட்டறிந்தோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இதுகுறித்து தெரிவித்தபோது, 3 நாள்கள் போட்டியை நடத்த ஒப்புதல் தந்தார். ஏ.ஐ.சி.எஃப். உள்பட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். விடாமுயற்சி மேற்கொண்டு இந்தியாவில் நடத்த அனுமதி பெற்றோம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் உடனே சென்னை செஸ் ஒலிம்பியாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஜோதி ஓட்டமும் தொடங்கப்பட்டது. இந்தப் போட்டி நடத்தப்படுவதால், இந்தியாவில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். ஆன்லைன் முறையில் ஏராளமானோர் இப்போட்டியை நேரடியாகக் கண்டு களிப்பர்.

செஸ் விளையாட்டுக்கு பெரு நிறுவனங்கள் அதிக அளவில் உதவி புரிய வேண்டும். ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் பங்களிப்பை ஆற்ற வேண்டும்.

ஃபிடே துணைத் தலைவர் தேர்தலில் பங்கேற்று விளையாட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். செஸ் ஆடாத நாடுகளில் அதை பிரபலப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com