சாதனை பெண்மணிகள்...!

பசுபிக் தீவு நாடான சமோவாவின் முதல் பெண் பிரதமராக ஃபியமி நவோமி மடாஃபா பதவியேற்றார். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை முறியடித்து, நாடாளுமன்ற வளாகத்திலேயே அவர் பதவியேற்றார்.
சாதனை பெண்மணிகள்...!


பசுபிக் தீவு நாடான சமோவாவின் முதல் பெண் பிரதமராக ஃபியமி நவோமி மடாஃபா பதவியேற்றார். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை முறியடித்து, நாடாளுமன்ற வளாகத்திலேயே அவர் பதவியேற்றார். சீனாவை கடுமையாக விமர்சிக்கும் இவர், முன்பு துணைப் பிரதமராக இருந்தவர். 

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில், நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி மாணவி கிரேசினா மெர்லி பங்கேற்று புதிய சாதனை படைத்தார். அவர் உயரம் தாண்டுதலில், 1.84 மீ. உயரம் தாண்டியுள்ளார்.

உலகஅளவில் இதுவரை 69 பெண்கள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டனர். இது மொத்த விண்வெளிப் பயணிகளில் 12 சதவீதம்.  இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

தான்சானியா நாட்டின் முதல் பெண் அதிபராக ஸமியாஸþலூகு பதவியேற்றுள்ளார்.

எஸ்தோனியா நாட்டின் முதல் பெண் பிரதமராக காஜா கல்லாஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நாட்டின் அதிபர் ஜெர்ஸிகி கல்ஜீலாயிக்கும் பெண்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com