சுற்றி பார்க்கப் போறோம்..!

வேனில்  அகில இந்தியப் பயணம் செய்யும் ஆர்வம் தமிழ்நாட்டு சுற்றுலா ஆர்வலர்களிடம் பிரபலமாகி வருகிறது. 
சுற்றி பார்க்கப் போறோம்..!

வேனில்  அகில இந்தியப் பயணம் செய்யும் ஆர்வம் தமிழ்நாட்டு சுற்றுலா ஆர்வலர்களிடம் பிரபலமாகி வருகிறது. 

தனது 4 வயது மகன் அபிஜோஷ்ஷுடன் இந்த ஆண்டு ஜனவரியில் புறப்பட்டனர் அசோக் - பிரபா தம்பதியினர்.  100 நாள்களில் 28  மாநிலங்கள், 4  யூனியன் பிரதேசங்களைச் சுற்றி பார்க்க வேண்டும் என்பதுதான் இவர்களின் லட்சியம். 

பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் அசோக் தனது அனுபவத்தைச் சொல்கிறார்:

"சுமார் 15,000  கி . மீ.  பயணித்துள்ளோம். வேனில் 100 நாள்கள் தமிழகத்தை பயணத்தில் சுற்றிப் பார்த்த முதல் தமிழகக் குடும்பம் நாங்கள்தான். 

இந்தப் பயணம் சவாலாக அமைந்தது.

நான் திருப்பூர் சாயக் கம்பெனியில் மேலாளராகப் பணிபுரிகிறேன். பயணத்தைத் தொடங்கும் முன் மனைவி பிரபாவை சம்மதிக்க வைப்பது சிரமமாக இருந்தது. பின்னர் பெற்றோரிடம் சம்மதம் பெறுவதற்கும் போராட்டம்தான்.

தினமும் இரவு அவர்களைத் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறோம் என்பதையும்,  அடுத்த நாள் எங்கு போகிறோம் என்பதையும் சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதி தந்தனர். எந்த வழியாகப் பயணத்தைத் தொடர்வது என்று பயணத் திட்டம் போடுவது சிரமமாக இருந்தது.

பழைய காரில் போகலாம் என்று நினைத்தோம். ஆனால் வழியில் எதா வது கோளாறு ஏற்பட்டால் என்ன செய்வது  என்ற எச்சரிக்கையில் புது வேனை வாங்கினோம்.  எனது வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் வைத்துக் கொண்டு ஜனவரி முதல் வாரம் கிளம்பினோ ம். 

வேனில்,  படுக்கை, பேன், டார்ச்,  கூடாரம்,  தேவையான  உடைகள், குடிநீர், சிறிய  கேஸ்  சிலிண்டர்,  ஸ்டவ் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டோம். 

சில மாநிலங்களில் உணவுகள் பிடிக்கவில்லை என்றால் சமைத்து சாப்பிட்டோம்.  குளியல் பெட்ரோல் பங்கில்தான். சாலையோரக் கடைகளில்தான் 

சாப்பிட்டோம். எங்கள் பயண விவரங்களை "பி ரபா ஸ் வி யூ'  என்ற யூ டியூப் சேனலில் அவ்வப்போது பதிவேற்றம் செய்துவந்தோம்.  வேனை நான் ஓட்ட  பிரபா  காமிராவை   கையாண்டார். 

தார்பாலைவனத்தில் இரவில் வானத்தைப் பார்த்தவாறு தூங்கினோம். காஷ்மீரில் முதல் முதலாக  ஐஸ் பெருங்கட்டிகளையும்  பனிப்போர்வையையும் பார்த்தோம்.  பல மாநிலங்களின் கலை,  கலாசாரங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

தமிழ்நாட்டில் தொடங்கி கேரளம்,  கர்நாடகம் என்று பயணித்து சுற்றினோம்.  வட இந்தியாவில் குளிர்காலம் என்பதால், தினமும்  காலையில் கொஞ்சம் தாமதமாகக் கி ளம்புவோம்.  வழியில் பம்ப் செட்,  அருவியைக் கண்டால் குளியல் போடுவோம்.  மதிய உணவு சமைத்தோம்.

இந்தியாவைச் சுற்றி வருவது எளிதான  விஷயமாக முடிந்தது. எங்கும் எந்த ஆபத்தோ,  பிரச்னையோ ஏற்படவில்லை. 

பயணம் பல பாடங்களையும்,  அனுபவங்களையும், தன்னம்பிக்கையையும் வழங்கியுள்ளது. அது எதிர்காலத்தைத் திட்டமிடவும் உதவும் என்றார் அசோக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com