

கவிஞர் வாலி பள்ளியில் படிக்கும்போதே ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கினார். அப்போது, ஆனந்த விகடனில் ஓவியத்தில் சிறந்து விளங்கிய ஓவியர் மாலியின் தீவிர ரசிகராக வாலி இருந்தார். இதனால் பள்ளி நண்பர் பாபு, வாலி என்று பெயர் சூட்டி, மாலியைப் போலவே நீயும் சிறந்து விளங்குவாய் என்று வாழ்த்தினார்.
பின்னர் வாலி, பாரதியாரின் ஓவியத்தை வரைந்து கீழே வாலி என்று கையெழுத்திட்டு தமிழ் ஆசிரியரிடம் காட்டியுள்ளார். அதைப் பார்த்த ஆசிரியர், உனக்குதான் வாலில்லையே அப்புறம் ஏன் வாலி என்று பெயர் சூட்டினாய் என்று கேட்டார். இதைக் கேட்ட சக மாணவர்கள் சிரித்தனர். பின்னர், வாலி ஒரு தாளில் கவிதையை எழுதி, ஆசிரியரிடம் நீட்டினார். அதில் கூறப்பட்டிருந்தது:
""வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.