லிஸ் ட்ரஸின் மறுபக்கம்...!

பிரிட்டனின் 56-ஆவது பிரதமராகவும்,  மூன்றாவது பெண் பிரதமராகவும்  லிஸ் ட்ரஸ்  பதவி ஏற்றார்.  இவரைப் பற்றி பல ருசிகர தகவல்கள் வியப்படைய வைக்கிறது.
லிஸ் ட்ரஸின் மறுபக்கம்...!


பிரிட்டனின் 56-ஆவது பிரதமராகவும், மூன்றாவது பெண் பிரதமராகவும் லிஸ் ட்ரஸ் பதவி ஏற்றார். இவரைப் பற்றி பல ருசிகர தகவல்கள் வியப்படைய வைக்கிறது.
இவருக்கு பெற்றோர் வைத்த பெயரான "மேரி எலிஸபெத் ட்ரஸ்' என்பது சுருங்கி லிஸ் ட்ரஸ் என்றானது. 47 வயதை கடந்துள்ளார். இவரது கணவர் ஹக் ஓலியரி. ஹக் கணக்காளராக பணி செய்கிறார்.
1997-இல் கட்சி சம்மேளனத்தில் சந்தித்த இருவரும் காதல் வயப்பட்டனர். ஒருமுறை ஸ்கேட்டிங் செய்யச் சென்ற ஹக் வழுக்கி கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது.
2000-இல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு பிரான்சிஸ் (16), லிபர்ட்டி (13 ) என இரண்டு மகள்கள். தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகள்களின் படத்தை பதிவு செய்தபோது கூட முகங்கள் தெரிகிறமாதிரி பதிவிடவில்லை. சரியான எச்சரிக்கையான அம்மா!
லிஸ் கேக் அருமையாகச் செய்வார். மகள்களின் பிறந்த நாளுக்கு வெட்டும் கேக்குகள் அனைத்தும் லிஸ் தனது கைகளால் அன்பு பாசம் சேர்த்து உண்டாக்கியதுதான்!
தேர்தலின்போது, தங்களது தாய்க்காகத் தேர்தல் பிரசாரப் பணிகளைச் சமூக வலைதளங்கள் மூலமாக செய்யும் பொறுப்பை மகள்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர். லிஸ் மூன்று படுக்கையறைகள், வெந்நீர் நீச்சல் குளம் கொண்ட பங்களாவை பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். இப்போது அவர் பிரதமர் ஆகியிருப்பதால் "10, டவுனிங் தெரு'விலுள்ள அரசாங்க மாளிகைக்கு குடி பெயர்ந்துள்ளார். லிபர்ட்டியின் பள்ளித் தோழிகளோ, ""பிரதமரின் அதிகாரபூர்வமான மாளிகையைச் சுற்றி பார்க்க வேண்டும்; மாளிகையில் முடிந்தால் ஒரு குட்டித் தூக்கம் போட வேண்டும்'' என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையிலும் கட்சிக்குள் எதிர்ப்புகளைப் புறந்தள்ளி லிஸ்ஸின் அரசியல் பயணம் தொடர்ந்தது. அது லிஸ்ûஸ பிரிட்டனின் பிரதமராக்கி இருக்கிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ""வாழ்க்கையில் நீங்கள் செய்த குறும்புத்
தனம் பற்றி சொல்லுங்கள்'' என்று லிஸ்ஸிடம் கேள்வி கேட்கப்பட்ட போது "இந்த நிகழ்ச்சியை எனது மகள்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனால் நான் செய்த குறும்புத்தனங்களை சொல்லப் போவதில்லை' என்று சொல்லி தப்பித்தார்.
லிஸ் ட்ரஸ்ஸின் புதிய உள்துறை செயலர் சுயெல்லா ப்ரவேர்மேன் என்பவர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். சுயெல்லாவின் அம்மா உமா தமிழ்ப்பெண். உமா செவிலியராக 45 ஆண்டுகள் பிரிட்டனில் பணிபுரிந்த சேவைக்காக பிரிட்டன் மகாராணியிடமிருந்து "எம்பயர்' விருதை பெற்றுள்ளார். உமா மொரிஷியஸில் இருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்தவர். சுயெல்லா பிரேவர்மேன், "ராணி எலிசபெத் சிறந்த பெண்' விருதை வென்றுள்ளார்.
பிரிட்டனின் பிரதமராகவுடன் லிஸ் ட்ரஸ் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் நிலவரம் குறித்து பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com