எட்டாவது அதிசயம் பொந்தன்புளி மரம்..!

உலகின் எட்டாவது அதிசயம் என தாவரவியல் அறிஞர் டேவிட் லிவிங்ஸ்டனால் அழைக்கப்பட்டதுதான் "பொந்தன் புளி மரம்'.
எட்டாவது அதிசயம் பொந்தன்புளி மரம்..!

உலகின் எட்டாவது அதிசயம் என தாவரவியல் அறிஞர் டேவிட் லிவிங்ஸ்டனால் அழைக்கப்பட்டதுதான் "பொந்தன் புளி மரம்'.  உலகின் மிகப் பழமையான மரங்கள் அனைத்தும் இந்த இனத்தே சார்ந்ததே.  ஜாம்பியாவில் இருந்த இம்மரம் 2, 500 ஆண்டுகள் வயதுடையது என கணிக்கப்பட்டது.

பிரெஞ்சு தாவரவியல் அறிஞர் மைக்கல் அடன்சன் 1750-இல் செனகல் தீவில் முதன்முதலில் இந்த மரத்தை அடையாளப்படுத்தினார்.  அவருடைய பெயரின் ஒருபகுதியை இந்த மரத்தின் தாவரவியல் பெயராக வைக்கப்பட்டது. 

இந்த மரங்களில் மொத்தம் ஒன்பது இனங்கள் உள்ளன. அதில்,  ஆறு இனங்கள் மடகாஸ்கர் தீவிலும்,  இரண்டு இனங்கள் ஆப்பிரிக்கா,  அரேபியா தீபகற்பத்திலும்,  ஓர் இனம் ஆஸ்திரேலியாவிலும் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமே 17 மரங்கள் உள்ளன. அதனால் ராமநாதபுரம் மாவட்டத்தை "தமிழ்நாட்டின் மடகாஸ்கர்'  என சிறப்புப் பட்ட பெயரே உண்டு.

இதுகுறித்து பேரையூரைச் சேர்ந்தவரும், வேளாணூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான முனியசாமி கூறியதாவது:

"நான் ஒன்பதாம்  வகுப்பு படிக்கும்போது,  கணித  ஆசிரியர் சித்திரவேல் வாயிலாக இந்த மரத்தை அறிந்தேன். 

மரத்தின் பெயர்கள்: கமுதியிலிருந்து அருப்புக்கோட்டை சாலையில் "பேரில்லா மரம் ‘  என்ற மரம் இருப்பதாக குறிப்பிட்டார்.  பின்பு,  நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் படிக்கும்போது,  "நீர்கொண்டான் மரம்'  எனப் பெயரிட்டேன்.

"பொந்தன் புளி',  "யானைப்புளி', "பாப்பிரப்புளி', " பெருமரம்', "பெருக்க மரம்', "கட்டப்புளி', "பேரில்லா பெருமரம்', "கற்பக விருட்சம்',  "நீர்கொண்டான் மரம்', "யானைக்கவுனி', "தலைகீழ்மரம்' எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் சில இடங்களில் "பேரில்லா மரம்'  என்றே அழைக்கப்படுகிறது.  

மர இலைகள் புளிப்பாக இருப்பதாலும், ஆயிரம் ஆண்டுகள் கடந்த மரங்கள் பொந்து விழுவதாலும்  இது "பொந்தன்புளி'  என அழைக்கப்படுகிறது.

யானையைப் போன்று பெரிதாகவும்,  வயதான மரத்தின் தண்டு யானையின் தோலைப் போல் இருப்பதால் "யானைப்புளி'  என்றும் அழைக்கப்படுகிறது. 

"பாப்பரர்' எனும் சொல் ஆப்பிரிக்கர்களைக் குறிப்பதால், ஆப்பிரிக்காவிலிருந்து வந்தது என்பதைக் குறிக்கும் விதமாக "பாப்பரப்புளி' எனவும், அடிமரம் பெருத்து இருப்பதால் பெருக்கமரம் எனவும், நீரை அதிகம் சேமித்து வைப்பதால் "நீர் கொண்டான் மரம்'  எனவும் அழைக்கப்படுகிறது. 

இந்த மரங்கள் விழுந்தாலும் அதன் தண்டு,  வேர்களிலிருந்து மீண்டும் முளைக்கும் திறன் பெற்றதால் இதற்கு "மரணமில்லா மரம்' என்று பெயர். ஆனால், மக்கள் இது விழுந்தவுடனே இறந்து விட்டதாக நினைத்து அறியாமையால் வெட்டி விடுகின்றனர் அல்லது எரித்து விடுகின்றனர்.

இந்த மரம் ஆப்பிரிக்காவை பூர்விகமாகக் கொண்ட மரம் என்றாலும் உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.  மரத்தின் கனிகளில் வைட்டமின் இ  அதிகம் உள்ளது.

முன்னர் யாராவது தவறு செய்துவிட்டால் பொந்தம்புளி மரத்தை கட்டிப்பிடிக்கச் சொல்வார்கள். தவறு செய்தவர் உண்மையை ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர் வயிறு வலித்துவிடும். பயத்தாலே பலர் உண்மையை ஒப்புக்கொண்டுவிடுவர்.  மரத்தின் பழங்களை உண்டால் பிள்ளைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம், சாமி மரம் என்றும் சொல்வர்.

மரத் தண்டின் நாரிலிருந்து கயிறு, கூடைப்பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.  இதன் இலைகள் காய்ச்சலுக்கு மருந்து.  இலைகள் கீரையாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இலைகளை சூப் வைத்து குடித்தால் ஆண்மை கூடும் என கணித்துள்ளனர். பழங்களை சர்பத் செய்து அருந்துகின்றனர். இதனை உண்ணும்போது நோய் எதிர்ப்பாற்றல் கூடுகிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com