ஆராய்ச்சிகளுக்கு உதவும் ரோபோ!

நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் வண்ணம் அறிவியல் வளர்ச்சி என்பது உலகம் முழுவதும் அபரிதமாக உள்ளது.
ஆராய்ச்சிகளுக்கு உதவும் ரோபோ!

நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் வண்ணம் அறிவியல் வளர்ச்சி என்பது உலகம் முழுவதும் அபரிதமாக உள்ளது. இதில்,  ஒன்றுதான் ரோபோக்கள். இவை ஆரம்பத்தில் ஆராய்ச்சிகளுக்கு உதவியாகவும், அடுத்தடுத்து வீட்டுவேலைகள் உள்ளிட்டவை செய்ய உருவாக்கப்பட்டன.

செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்) மனித வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோக்கள், மனிதன் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்வதைத் திரைப்படங்களில் பார்த்துள்ளோம்.

இது தற்போது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் கூட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி,  நாம் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கும் வசதியைப் பெற்றுள்ளோம். இந்த செயற்கை நுண்ணறிவை முழுவதுமாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ரோபோ சாமானிய மக்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காடப் போகிறது என்றால் சற்று நம்புவதற்கு மனம் தயங்கினாலும் அதுதான் உண்மை.

ஆம், இதைச் சாத்தியமாக்கும் அடுத்தகட்ட முயற்சியில் டு-நாட்-பே என்ற அமெரிக்க நிறுவனம் இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோவை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோ வாதாடவுள்ள வழக்கு வரும் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.

2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டு-நாட்-பே நிறுவனம், சாமானிய மக்களுக்காக விதிக்கப்படும் பார்க்கிங் டிக்கெட் வழக்குகளை கையாளுவதற்கான சேவையை வழங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து வரும் காலங்களில் குடியேற்ற உரிமைகள் (இமிகரேஷன் ரைட்ஸ்),சமூக பிரச்னைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கி தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க இந்த ரோபா வழக்குரைஞர்களைப் பயன்படுத்தவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை சாட்பாட் மூலம் ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வந்த செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள், முதன்முறையாக சட்டப்பூர்வமாக ஒரு வழக்கைக் கையாள உள்ளது. இதற்கான வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் பிரதிவாதி உள்ளிட்டவர்களின் தகவல்கள் வெளியிடவில்லை. இந்த ரோபோக்கள் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களை ஆராய்ந்து, தனது கட்சிக்காரருக்கு என்னென்ன வாதங்களை வைக்க வேண்டும் என ப்ளூடூத் இயர்போன் மூலம் பரிமாறும்.

நீதிமன்றத்தில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அமெரிக்க  உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்குப் பதிலளிக்கும் வகையில், டு-நாட்-பே நிறுவன உரிமையாளரான பிரவுடர் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில், சோதனை முயற்சியாக மேற்கொள்ளவுள்ள இந்த வழக்கில் ரோபோ தோல்வி அடைந்தால், அதற்கான அபராதத் தொகை எவ்வளவு இருந்தாலும், அதைச் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடை மிளகாய் அறுவடையில்...: ஜப்பானின் "ரோபோ' நிறுவனமான ‘அக்ரிஸ்ட்'டின் விஞ்ஞானிகள், குடை மிளகாயை அறுவடை செய்யும் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

கூரை போடப்பட்ட பண்ணைகளில் விளையும் குடை மிளகாய் செடிகள், வரிசையாக வைக்கப்பட்ட தொட்டிலில் வளர்கின்றன. அக்ரிஸ்ட் உருவாக்கியுள்ள "எல்' என்ற ரோபோ, மேலே இரும்பு வடத்தில் தொங்கியபடி, செடி வரிசைகளின் இடைவெளியில் பயணித்து, குடை மிளகாய் செடிகளைப் பார்வையிடுகிறது.

அறுவடைக்குத் தயாரான மிளகாய்களை அடையாளம் காண, சில கேமராக்கள்  உணரிகளும் "எல்' ரோபோவில் இருக்கின்றன. இலைகளில் மறைந்திருக்கும் குடை மிளகாயையும்  இந்த ரோபோ கண்டு, தனது கரத்தால் லாவகமாகப் பறிக்கிறது . இது, மிளகாயின் காம்புப் பகுதியை துல்லியமாகப் பிடித்து,  அடையாளம் ஏற்படாமல் துண்டித்து, ஒரு கூடையில் பத்திரமாகக் கொட்டிவிடுகிறது.

இந்த ரோபோவால், குடை மிளகாய் விவசாயிக்கு 20 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கும். எனவே த ôன், எல் ரோபோவை ரூ.9.20 லட்சத்துக்கு கொடுத்துவிட்டு, அறுவடையில் பங்கு பெறும் திட்டத்தை அக்ரிஸ்ட் ரோபோ நிறுவனம் முன்வைத்துள்ளது. இயந்திரங்களின் வேலையால் மனிதர்களின் வேலை பளு குறைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com