காடு, நிலம், கல்வி

சர்வதேச மேடைகளை அலங்கரித்த "தேன்' படத்தை இயக்கியவர் கணேஷ் வினாயகன். தற்போது உண்மை சம்பவத்தை தழுவிய கதையை இயக்கி வருகிறார்.
காடு, நிலம், கல்வி

சர்வதேச மேடைகளை அலங்கரித்த "தேன்' படத்தை இயக்கியவர் கணேஷ் வினாயகன். தற்போது உண்மை சம்பவத்தை தழுவிய கதையை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்பாடத நிலையில் படம் பற்றி இயக்குநர் பேசும் போது....

""1997-இல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிபடையில் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறேன். ஒரு வேளாண் சமுகத்திற்கும், வேட்டை சமுகத்திற்க்கும் இடையில் நடந்த பிரச்னைகளை மையமாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதையில் காடு சார்ந்து, நிலம் சார்ந்து, கல்வி சார்ந்தும் உள்ள பிரச்னைகளை பேசப்பட்டுள்ளது.  தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலும் இக்கதை ஒரு வரவேற்க்கத்தக்க ஒரு திரைப்படமாக அமையும். இதில் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று வெற்றியடைந்த நடிகர் ஆரவ் கதாநாயகனாக நடிக்கிறார்.  "ஜோக்கர்' மற்றும்  பிக்பாஸ் மூன்றாம் சீசன் புகழ் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடிக்கிறார்.  

யோகிபாபு, காளிவெங்கட், பேபி கிருத்திகா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர்.  முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்காக முக்கிய நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சரவணன் தயாரிக்கின்றார். சுகுமார் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றுகிறார். லால்குடி இளையராஜ கலை இயக்கத்தை கவனிக்கிறார். லாரன்ஷ் கிஷோர் எடிட் செய்கிறார்.  

படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்குகிறது.  கொடைகானல், தென்மலை,ஜோக்பால்ஸ், தேனி மற்றும் டாப்ஸ்லிப் உள்ளிட்ட மலை சார்ந்த இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெறும் என்றார் கணேஷ் வினாயகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com