பூலோக சொர்க்கம்...!

பூலோக சொர்க்கம்...!

சுவிட்சர்லாந்து  நாட்டின் முக்கிய நகரம் ஜூரிச்.  நிதி ஆதாரத்தில் இதற்கே முதலிடம்.

சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரம் ஜூரிச். நிதி ஆதாரத்தில் இதற்கே முதலிடம்.

உலகின் மிக மகிழ்ச்சியான நகரங்களில் ஜூரிச்சுக்கு மூன்றாவது இடம். நதிகள் கொண்ட பூமி. அதனால் செழிப்புக்கு பஞ்சமில்லை. ஆகவே, இதை "பூலோக சொர்க்கம்' என்று அழைப்பர். இங்கு மற்ற எல்லா நாடுகளையும்விட விலைவாசியும் அதிகம். குறிப்பாக, காபி உலகிலேயே இங்குதான் மிக அதிகம். வாடகை அமெரிக்காவைவிட அதிகம். இருந்தும், சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இதில், இந்தியர்களும் சேர்த்திதான். இந்திய உணவகங்கள் மட்டும் 10க்கும் மேற்பட்டவை உள்ளன. அதில், ஓர் உணவகத்தின் பெயர் "கேரளா'.

பழைமையும் புதுமையும் இணைந்த நகரம். எட்டாம் நூற்றாண்டு கத்தீட்ரல் கட்டடங்கள் பார்க்கப்பட வேண்டியவை.

பழைய நகரில் பழங்கால கட்டடங்கள், வளைவு இல்லாத சாலைகள், ஓங்கி உயர்ந்து நிற்கும் சர்ச்சுகள், கடிகாரத்துடன் கூடிய கட்டடங்கள் என பலவற்றை ரசித்து பார்க்கலாம்.

மூன்றாயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட 208 மலைகள் உள்ளன. பனி படர்ந்தும், புல்வெளி, பள்ளத்தாக்கு என மாறி மாறி காணும் பாக்கியம் இதன் கூடுதல் அழகு.

இப்பவும் சாக்லெட்.. வாட்ச்சுக்கு இங்கு டிமான்ட் அதிகம். பட்டும் பாப்புலர்.

நூற்றுக்கும் அதிகமான கத்தீட்ரல்கள், ஏராளமான அருங்காட்சியகங்கள் பார்க்க உள்ளன. கேலரிகளுக்கு பஞ்சமில்லை!

இவற்றில் மியூசியம் ஆஃப் ஆர்ட், ஸ்விஸ் நேஷனல் மியூசியம் ஆகிய இரண்டு மிக பிரபலம்.

இங்கு ஜெர்மன் மொழியின் தாக்கம் அதிகம். ஜெர்மன், சுவிட்ஸ் இணைந்து கலவையாகப் பேசுவது கவனிக்கத்தக்கது. நதியில் படகு சவாரியில் நகரை ஒரே நாளில் சுற்றிவந்துவிடலாம். மேலே குறிப்பிட்ட இரு மியூசியம்களில் பொழுது கழிக்க பல மணி நேரம் தேவை. அவ்வளவு விஷயங்கள் அதனுள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com