மரங்களை வளர்த்தாலே...

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில்,  குடியிருப்புப் பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்தும், இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியும் வருகிறார் ஓய்வு பெற்ற வனத் துறை பணியாளர் ஏ.வீரையா.
மரங்களை வளர்த்தாலே...

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில்,  குடியிருப்புப் பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்தும், இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியும் வருகிறார் ஓய்வு பெற்ற வனத் துறை பணியாளர் ஏ.வீரையா.

திருச்சி விமான நிலையம், அம்பிகை நகரைச் சேர்ந்த இவர் அறுபத்து வயதானவர்.  மரங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் உணரும் வகையில்,  பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இவரது இரு சக்கர வாகனத்தில் பறவை கூடுகட்டுவதைக் கண்டு,  அதை எடுக்காமல் வைத்திருந்து, பறவை குஞ்சு பொரித்து வெளியான பின்னரே வாகனத்தை எடுத்து பிரபலமானவர்.

அவரிடம் பேசியபோது:

'மரங்கள் இன்றி மனிதர்கள் மட்டும் இல்லை.  எந்த உயிரும் மண்ணில் வாழ முடியாது. மனிதன் பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் கடந்து பின்னர் இறப்பு வரை மரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், மரத்தின் அருமையை மக்கள் இன்னும் உணரவில்லை. மரங்கள் குறைந்ததால் புவியில் தண்ணீர் வற்றி விட்டது. 

தூய பிராண வாயுவுக்காக,  லட்சக்கணக்கான ரூபாய் செலுத்தி காத்திருந்து வாங்கி சுவாசிக்கும் நிலை வரும்போதுதான் மரத்தின் மகிமையை மக்கள் உணர்வர். கடந்த சுமார் 30 ஆண்டுகளில் சாலை வசதி, பேருந்துநிலையங்கள், விமான நிலையங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் லட்சக்கணக்கான மரங்கள் தமிழகத்தில் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஈடாக வளர்க்கப்படும் மரங்கள் சொற்பம்தான்.

எனவே,  என்னால் முடிந்தவரை மரங்களை வளர்க்க உதவுவோம் என்ற வகையில் சிறுமுயற்சியை மேற்கொண்டுள்ளேன். எவ்வளவோ பணம் செலவாகும் நிலையில் இயற்கைக்காக சில ஆயிரங்கள் சில செலவழித்து மரங்கள் வளர்ப்பை மேற்கொண்டு வருகிறேன். மொத்தமாகவோ, சில்லரையாகவோ மரம் வளர்க்க வேண்டும் என விரும்புவோர் 9443399955 என்ற எனது எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் போதும், அவர்கள் விரும்பும் மரக்கன்றுகளை பதியமிட்டு கன்றாக்கி வழங்குவதுடன் நானே சென்று அவற்றை நடவு செய்தும் கொடுத்து வருகிறேன். 

அண்மைக்காலமாக குடியிருப்புப் பகுதிகளில் சாலையோரம் மட்டுமின்றி விரும்புவோரின் வீடுகளிலும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறேன். காற்று மாசு,  ஓசோன் ஓட்டை, பட்டாசு வெடிக்கக் கூடாது என்றெல்லாம் கூறிவருபவர்கள் மரக்கன்றுகளை வளர்த்து மரமாக்க வேண்டும் எனக் கூறுவதில்லை. 

மரங்களை  வளர்த்தாலே அனைத்தும் சரியாகிவிடும். சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் முடிந்த சிறு முயற்சி அது, எனது வீட்டில் நாற்றங்காலை ஏற்படுத்தி,  அதில் பல்வேறு வகையான மரக்கன்றுகளைப் பதியமிட்டுள்ளேன். மரம் வளர்ப்பில் ஆர்வமுள்ளோருக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவதோடு, பொது இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து, மரம் வளர்ப்பு குறித்த ஆலோசனைகளையும் இலவசமாகவே வழங்கி வருகிறேன்.

குடியிருப்புப் பகுதிகள்,  சாலையோரங்களில்  மரக்கன்றுகளை நடவு செய்து மரம் வளர்க்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு  வைத்த மரக்கன்றுகள் தற்போது மரமாகியுள்ளன. இதற்காக எனது சொந்த செலவில் உதவியாளர் ஒருவரை வைத்துக்கொண்டு தினசரி சுமார் 10 மரக்கன்றுகளையாவது முடிந்தவரை நடவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை  அண்மைக்காலமாகச் செய்துவருகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com