பட்டில் புதுமை; பாரம்பரியத்தில் பெருமை

ராமாயணத்தில் சீதை உடுத்திய பட்டுப் புடவையின் சரிகை ஓரங்களில் அன்னப் பட்சி வடிவம் நெசவு செய்யப்பட்டிருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு இருக்கிறது.
பட்டில் புதுமை; பாரம்பரியத்தில் பெருமை

ராமாயணத்தில் சீதை உடுத்திய பட்டுப் புடவையின் சரிகை ஓரங்களில் அன்னப் பட்சி வடிவம் நெசவு செய்யப்பட்டிருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு இருக்கிறது. மகா விஷ்ணு பட்டுப் பீதாம்பரம் தரித்துக் கொண்டவர் என்று கொண்டாடுகிறோம். அத்தகைய புராதனமான கலைவடிவம் பட்டும் நெசவும்!  
இந்த மண்ணின் இத்தகைய கலைவடிவத்தைப் பாதுகாத்து வளர்ப்பது நெசவாளர்கள் என்றால் அவர்களின் திறமைகளை உலகுக்கு வெளிப்படுத்துவது உற்பத்தியாளர்கள்தான். 
ஆர்.எம்.கே.வி. நிறுவனம் பல தலைமுறைகளாக இந்தத் துறையில் தங்களுக்கென தனித்த அடையாளம் கொண்டவர்களாக இருக்கின்றனர். 
இந்த  நிறுவனமானது ஆராய்ச்சி- மேம்பாட்டுப் பிரிவு ஒன்றை அமைத்து, தொடர்ந்து பட்டு நெசவில் பாரம்பரியமான முறைகளை மீட்டெடுக்கவும் புதிய முயற்சிகளை அதன் அடிப்படையில் மேற்கொள்ளவும் அதிகமான கவனம் எடுத்து வருகின்றனர்.  
இந்த முயற்சிகளில் அவர்கள் வெளிக்கொணரும் புதிய டிசைன்களுக்காக ஆண்டுதோறும் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 
இந்த ஆண்டு பட்டுப்புடவையில் புதிய வரவாக இயற்கை சாயம் ஏற்றப்பட்ட பட்டில் நாட்டுப்புறக் கலைவடிவங்கள் அசல் வெள்ளி ஜரிகையில் நெசவு செய்யப்பட்டிருக்கின்றன.
கிராமப்புறங்களில் காணும் அழகான ஓவியங்கள், வடிவங்களைச் சேலையில் கொண்டு வந்து பாரம்பரியமான கலைவடிவங்களுக்குப் புதிய அடையாளத்தை இதன்மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இயற்கையான இலை, பூ காய் கனி இவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டதுதான் இயற்கை வண்ணங்கள்,  கண்கவரும் புதிய நிறங்களாக இவை கிடைக்கின்றன. 
டிசைன்கள் ஆசியாவின் கலைவடிவங்கள்,  கிராமங்களில் காணப்படும் பாரம்பரியமான வடிவங்கள் திருமண முறைகளில் காணப்படும் சிறப்புகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தீம் புடவைகள் என்று மாமல்லபுரம், பத்மநாபபுரம் அரண்மனை விதானத்துத் தாமரை என்று வந்ததைப் போல இந்த ஆண்டு ஆசியாவின் கலைவடிவங்கள். பலவிதமான வாழ்க்கை முறைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கிராமப்புற அலங்கார வடிவங்கள், கிராமியக்கலை, தாய்லாந்தின் நுட்பமான அழகுடன் கோபுர வடிவங்கள் என்று இந்த ஆண்டு தீபாவளி சிறப்புப் பெறுகிறது. மைசூரு அரண்மனையின் கிருஷ்ணர் பட்டுப் புடவைக்குப் புதிது. நேர்த்தியான வடிவமைப்பும் தரமான நூல், ஜரிகையும், நெசவுக் கலைஞர்களின் திறனும் பளிச்சிடும் அற்புதமான சேலைகள் ஒன்றைப்போல மற்றொன்றைக் காண முடியாது.
கோடாலி கருப்பூர் சேலைகள்,  பூ ஜோடி சேலையின் வாழைப்பூவின் பின்னிப் பிணைந்த வடிவமைப்புகள், பைத்தானியின் கலாசார வடிவங்கள் போன்றவை சேலை அணிய நாட்டமில்லாத பெண்களையும் சேலைகளை நோக்கி ஈர்ப்பதாக இருக்கும். 
உலகத் தரத்திலான டிசைன்கள், பாரம்பரியமான வண்ணங்கள், புதுமையான முயற்சிகள் தற்போது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மட்டும் என்றில்லை. உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் வாங்குவதற்கு வசதியாக ஆன்லைனிலும் பார்த்து வாங்க முடியும்.
இந்திய கலாசாரம்,  கலெக்ஷன் இந்தியாவின் நிலையான பாரம்பரிய கைவினைக் கலையை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளது. இதில் நுட்பமான பனாரஸ் வேலைப்பாடு முதல் கலாசார நினைவுச் சின்னங்கள் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளைச்சார்ந்த நேர்த்தியான கலையம்சங்களை வடிவமைத்திருக்கின்றனர். 
இந்தியாவின் இணையற்ற கலாசாரத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அதன் பண்டைய கலையைத் தற்போதைய பாணியுடன்  இணைத்து வழங்குவதை எப்போதும் போல இம்முறையும் ஆர்எம்கேவி மிக அழகாக வழங்கியுள்ளது.
ஏற்கெனவே அறிமுகமான லினோ கலெக்ஷன் பட்டுப்புடவைகள் இந்த ஆண்டு இயற்கை வண்ணம் ஏற்றப்பட்டதாகக் கிடைக்கிறது என்பதும் சிறப்பு.  லினோ கலெக்ஷன் நெசவுத் துறையில் அரிய முயற்சி. இந்தப் புதிய தனித்துவமிக்க சேலைகள் சிறப்பு அவற்றின் லேசான தன்மைதான். பட்டுப் புடவைகள் என்றாலே கனமானவை என்ற எல்லார் மனதிலும் இருக்கும் எண்ணத்தை இந்தச் சேலைகள் முறியடிக்கின்றன.
விதவிதமான வண்ணமயமான சிறுவர்களுக்கான உடைகள் இந்த ஆண்டு தீபாவளி வரவாக இடம் பிடித்திருக்கின்றன. சேலைகள் லினன் முதல் சுங்கடி வரை ஏராளமான வகைகளில் கிடைக்கின்றன. காதி சேலைகள் மென்மையும் அழகும் கொண்ட நவநாகரிகப் பெண்களுக்கான உடைகள் என்று சொல்லலாம். அலுவலகம் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக வடிவமைப்பில் கிடைக்கின்றன. 
பெண் குழந்தைகளுக்கான உடைகளில் பாரம்பரியப் பட்டுப் பாவாடைகள், பாவாடை தாவணி பட்டில் மட்டுமல்லாது இன்னும் பலவகையான துணி ரகங்களில் பளிச்சிடுகின்றன. கல்லூரிப் பெண்களுக்கான சல்வார் வகைகள் இந்த ஆண்டு பட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கும் வந்தாகி விட்டது.
ஆண்களுக்கென்றும் தனியாக சிந்தித்துப் புதிய முயற்சிகளைஆர்.எம்.கே.வி. இளந்தலைமுறை மேற்கொண்டு வருகிறது. அன்றாட உடைகள் தாண்டி இந்தியாவின் அனைத்து வகையான உடைகள் இந்த தீபாவளிக்கு கிடைக்கின்றன. உலகளாவிய தரத்திலான வடிவமைப்பில் ஆண்களுக்கான உடைகள் இடம்பிடித்திருக்கின்றன.
சொந்த முயற்சியில், தறியில் நெசவுக் கலைக்கு மதிப்பளிக்கும் ஆர்.எம்.கே.வி. நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் பொலிவோடு வாடிக்கையாளர்களை 
மகிழ்விக்கத் தயாராகிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com