விண்வெளியில் பெண்களின் சாதனை...!

விண்வெளி பயணங்களில் பெண்கள் இப்போது அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ளனர்.  அவர்களில் சிலரைப் பற்றி அறிவோம்:
விண்வெளியில் பெண்களின் சாதனை...!

விண்வெளி பயணங்களில் பெண்கள் இப்போது அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ளனர்.  அவர்களில் சிலரைப் பற்றி அறிவோம்:

சீதா சோமசுந்தரம்:

இஸ்ரோவின் அறிவியல் திட்ட அலுவலகத்தில் திட்ட இயக்குநரான இவர்,   பரிசோதனை நிபுணர்களில் முக்கியமானவர். தில்லி பல்கலைக்கழகத்தில் இந்து கல்லூரியில் இளநிலை அறிவியல் படித்தவுடன்,  சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

இந்தியாவின் முதல் 'அஸ்ட்ரோசாட்' தொலைநோக்கியின் முதன்மை ஆய்வாளராகச் செயல்பட்டவர்.

தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், ''ஒரு பெண்ணாக நான் பல சவால்களை எதிர்கொண்டுள்ளேன். இஸ்ரோவில் நான் பணியில் சேர்ந்தபோது, குறைந்த அளவே பெண்கள் இருந்தனர். தற்போது அதிக அளவில் இணைந்து வருகின்றனர்'' என்றார்.

கீதா ராம்குமார்:

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வளி மண்டல இயக்கவியல் துறைத் தலைவராக, பல ஆய்வுகளை நடத்தியவர் கீதா ராம்குமார்.  இவர் திருச்சூர் விமலா கல்லூரியில் முதுநிலை இயற்பியல் படித்தார். 1985-ஆம் ஆண்டாக இளம் விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்தவர்.

ரேடார் நுட்பத்தில் மின்காந்த அலைக்கற்றைக்குப் பதிலாக ஒளி அலைக்கற்றைகளைப் பயன்படுத்தி, வளிமண்டலத்தின் இயல்புகளைக் கண்டுபிடிக்கும் லிடார் தொழில்நுட்பத் துறையிலும் ஆய்வுக் குழுத் தலைவராகச் செயல்பட்டவர்.

இவர் இஸ்ரோவில் தனது அறிவியல் அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.

அன்சாரி:

அமெரிக்காவின் கொலம்பியா விண்வெளி ஓடத்தின் விபத்துக்குப் பின்னர், ரஷிய நாட்டு விண்ணூர்திகள் மட்டுமே சர்வதேச விண்வெளிநிலையத்துக்குச் செல்ல உதவின. அந்த வகையில், முதன்முறையாக ரஷிய நாட்டு சோயுஸ்- டி.எம்.ஏ. 9' விண்ணூர்தியில் 2006-ஆம் ஆண்டு செப். 18-இல் அமெரிக்காவின் பன்னாட்டு விண்வெளி நிலையம் சென்றவர் அனுஷேஹ்அன்சாரி.  இவர்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் இஸ்லாமிய பெண்மணி. 

இதற்காக இவர் செலுத்திய கட்டணம் இரண்டு கோடி டாலருக்கும் அதிகம். இவர் 1966-ஆம் ஆண்டில் பிறந்தவர். 1991-ஆம் ஆண்டில் இவரது கணவர் ஹமீத் அன்சாரி, மைத்துனர் அமீர் அன்சாரி ஆகியோர் 'டெலிகாம் டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தை நடத்தினர்.  இருப்பினும், 2000-ஆம் ஆண்டில் 55 கோடி டாலருக்கு அந்த நிறுவனத்தை 'சோனஸ் நெட்வொர்க் இன் கார்ப்பரேஷன்' என்ற அமைப்புக்கு விற்றுவிட்டனர். இந்த வகையில் அனுஷேஹ் அன்சாரி பணக்காரப் பெண்மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com