சமையல் சமையல்

சமையல் சமையல்

கத்திரிக்காய் மிக்சட்

மசாலா பொரியல்

தேவையான பொருள்கள்:

நறுக்கிய கத்தரிக்காய், கோவைக்காய், கேரட், உருளைக்கிழங்கு- தலா கால் கிண்ணம்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- 1 மேசைக் கரண்டி

மஞ்சள் தூள், சீரகம்- கால் தேக்கரண்டி

வறுத்து எடுக்க:

மிளகு, - அரை தேக்கரண்டி

கடுகு, சீரகம்- கால் தேக்கரண்டி

மிளகாய்- 4

தனியா- 2 தேக்கரண்டி

பட்டை- 1 துண்டு

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு போட்டு தாளித்து அதில் அனைத்துக் காய்கறிகளையும் போடவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் அதில் வறுத்து அரைத்த பொடியை போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

அஸ்பகரஸ் பட்டாணி புலாவ்

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி- 2 கிண்ணம்

அஸ்பகரஸ் (தண்டு வகை) , பச்சை பட்டாணி- தலா 1 கிண்ணம்

வெங்காயம்- 1

இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி

சீரகம்- அரை தேக்கரண்டி

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

தண்ணீர்- 2 கிண்ணம்

தேங்காய் பால்- 1 கிண்ணம்

பிரியாணி இலை- 1

உப்பு, கொத்துமல்லி- தேவையான அளவு

செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, தண்ணீரை வடித்து வைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி சீரகம் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாடை போக வதக்கவும். அதில், அரிசி பிரியாணி இலை, தேங்காய்ப் பால், தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டாணி, நறுக்கிய அஸ்பகரஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும், அரிசி வெந்ததும் பட்டாணி, அஸ்பகரஸ் கலவையை அதில் சேர்த்து உடையாமல் கிளறவும். கொத்துமல்லி இலையை சேர்த்து இறக்கவும்.

ஸாஃப்ராணி புலாவ்

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி - 2 கிண்ணம்

குங்குமப் பூ- 1 தேக்கரண்டி

முந்திரி, பாதம், பிஸ்தா, வால்நட் கலவை, உலர்ந்த திராட்சை- 1 கிண்ணம்

பைனாப்பிள், பப்பாளி, மாதுளை, திராட்சை, ஆப்பிள் கலவை- 1 கிண்ணம்

பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு- சிறிதளவு

கருப்பு சீரகம்- அரை தேக்கரண்டி

வறுத்த வெங்காயம்- அரை கிண்ணம்

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

கொத்துமல்லித் தழை,

புதினா- 1 கைப்பிடி

சர்க்கரை, தனியா, சீரகத் தூள்- தலா 1 மேசைக் கரண்டி

பால்- கால் கிண்ணம்

எண்ணெய்- 2 மேசைக்கரண்டி

நெய்- 1 மேசைக்கரண்டி

செய்முறை: அரிசியை களைந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும், வெங்காயத்தை நீள வாக்கில் வறுக்கவும். குங்குமப் பூவை பாலில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளிக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் சேர்த்து வறுக்கவும். உலர்ந்த திராட்சை சேர்த்து கருகாமல் வறுக்கவும். இஞ்சி- பூண்டு விழுது, சர்க்கரை, தனியா, சீரகத்தூள் சேர்த்து வதக்கவும், வதக்கிய வெங்காயம், பாலில் ஊறிய குங்கமப் பூவில் பாதி பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, புதினா சேர்த்து வேக வைக்கவும், அரிசி வெந்ததும் மீதமுள்ள குங்குமப் பூவை சேர்க்கவும். பழங்கள் கலவையை சேர்த்து சாதம் உடையாமல் கிளறவும். மேலே சிறிது நெய் விட்டு கொத்துமல்லி, குங்குமப் பூவால் அலங்கரிக்கவும்.

-லோ. சித்ரா, கிருஷ்ணகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com