கோடையிலும் குளுமை பெற..!

ஜன்னலை ஒட்டி அமைக்கும் பிளைண்ட்கள், வெளிச்சத்தை மட்டும் அல்ல வெப்பத்தையும் கட்டுப்படுத்த கூடியவை.
கோடையிலும் குளுமை பெற..!

கோடைக்காலம் நெருங்கும் நிலையில், வீடுகளில் குளுமை எப்போதும் இருக்க டிப்ஸ்:

*வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம் அவசியம். எனவே ஜன்னல்கள் எதிரெதிர் திசைகளில் இருந்தால், காற்று எளிதாக உள்ளே வந்து வெளியேறும். காலையில் 5 முதல் 8 மணி வரையிலும், மாலையில் 7 முதல் 10 மணி வரையிலும் ஜன்னல்களை திறந்து வைத்தால், குளிர்ந்த காற்று வீட்டுக்குள் நுழைந்து அறை வெப்பநிலையைக் குறைக்கும்.

*வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து செடிகொடிகள் வளர்த்தால், பெருமளவு வெப்பத்தை அந்த தாவரங்களே உள்வாங்கும். இதனால் வீட்டுக்குள் குளிர்ச்சியாக இருக்கும்.

* ஜன்னலோரங்களில் செடிகள் வளர்த்து கொடிகளைப் பரவ விடுவதால், வீட்டின் அழகை அதிகரிப்பதுடன், காற்றில் உள்ள வெப்பத்தை உறிந்துகொண்டு, குளிர்ச்சியான காற்றை வீட்டுக்குள் அனுப்பும். வீட்டை சுற்றியுள்ள காற்றும் குளுமையடையும்.

* வீட்டின் கூரை வழியாக வெப்பம் இறங்குவதைத் தடுக்க, தளத்தின் மேற்பரப்புகளிலும், மேற்கூரைகளிலும், ஒயிட்வாஷ் செய்யலாம். வெண்மை நிறம் ஒளியை பெருமளவு பிரதிபலித்துவிடும் என்பதால் வெப்பம் வீட்டுக்குள் இறங்காது. ஆனால் இது நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது என்பதால் அடித்த ஆண்டு மீண்டும் ஒயிட்வாஷ் செய்ய வேண்டி இருக்கும்.

*பழைய வகை குண்டு பல்பு, மின்சாரத்தை அதிகம் ஈர்ப்பதுடன், வெப்பத்தையும் அதிகமாக வெளியேற்றும். ஏனவே கோடையில் சி.எப்.எல்., எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்துவதே சரியானது.

* மூங்கிலுக்கும் வெப்பத்தைத் தடுக்கும் சக்தி உண்டு. எனவே வீட்டு கதவு, ஜன்னல்களை ஒட்டி மூங்கில் பாய்களைத் தொங்கவிட்டால், அவை வெப்பத்தை வெளியிலேயே நிறுத்திவிடும்.

*ஜன்னலை ஒட்டி அமைக்கும் பிளைண்ட்கள், வெளிச்சத்தை மட்டும் அல்ல வெப்பத்தையும் கட்டுப்படுத்த கூடியவை. அதுபோல ஜன்னல் பால்கனியை ஒட்டி ஷேட்கள் அமைத்தாலும் வீட்டுக்குள் வெப்பம் வருவதை கட்டுப்படுத்தலாம்.

*தினசரி பயன்படுத்தும் மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், ஃபேன், அயர்ன்பாக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களின் பிளக்கை பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் அன்பிளக் செய்து வைக்கவும். சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தாலும், சாக்கெட்டுகளில் சொருகியிருக்கும் எந்த பிளக்கும் வெப்பத்தை உருவாக்கவே செய்யும். வெப்பத்தையும் மின்செலவையும் குறைக்க அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட தரமான மின் சாதனைகளை பயன்படுத்தலாம்.

* ஒரு டேபிள் ஃபேன், பெரிய உலோகக் கிண்ணம், கொஞ்சம் ஐஸ்கட்டி இருந்தால் போதும், அறைக்குள் ஏசி ஓடும் உணர்வை ஏற்படுத்திவிடலாம்.

-செளமியா சுப்ரமணியன், பல்லாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com