இளைஞர்களுக்கு "முகவரி' தரும் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக் எனப்படும் சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளத்தை தெரியாத இளைஞர்களே இன்று இல்லை. இந்தியாவில் செல்போனுக்கு அடுத்தபடியாக இளைஞர்களால் அதிகம் பயன்படுத்துவது ஃபேஸ்புக்தான். நண்பர்களைத் த
Updated on
1 min read

ஃபேஸ்புக் எனப்படும் சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளத்தை தெரியாத இளைஞர்களே இன்று இல்லை. இந்தியாவில் செல்போனுக்கு அடுத்தபடியாக இளைஞர்களால் அதிகம் பயன்படுத்துவது ஃபேஸ்புக்தான்.

நண்பர்களைத் தேடிக் கொள்வது, அரட்டை அடிப்பது என்ற பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே உள்ளடக்கியது என்ற கருத்து மட்டுமே பலரிடம் உள்ளது. ஆனால் வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தளமாகவும் இது மாறிவருகிறது.

இந்த இணையதளத்தில் நாள்தோறும் உலவும் லட்சக்கணக்கான இளைஞர்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன், தங்கள் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்புகள், அதற்கான தகுதிகளையும் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அந்தத் தகுதி உடையவர்கள் வேலை பெற ஏதுவாகிறது.

 ÷வேலைவாய்ப்புக்கு என்று பிரத்யேகமாக பல இணையதளங்கள் இருந்தாலும், அதில் பதிவு செய்வது, ஏராளமான வாய்ப்புகளில் தனக்கு ஏற்றது எது என்பதைத் தேர்ந்தெடுப்பது என்று சற்று நீண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால் ஃபேஸ்புக் மூலம் தங்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களுக்கு அவர்களின்

 திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர உதவுகிறது. சாப்ட்வேர் மற்றும் வங்கித் துறைகளில் உள்ள பலர் தங்கள் நிறுவனங்களில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை நிரப்ப இப்போது பேஸ்புக்கில் உள்ள தங்களின் நண்பர்களின் மூலமே அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது குறைந்த எண்ணிக்கையில் உள்ள இந்த புதிய நடைமுறை, நாளடைவில் பெரிய அளவில் விரிவடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

 சிறந்த வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும்போது தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான உதவியை செய்த திருப்தியைப் பெற முடிகிறது. நட்பு என்பதை மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வது, அரட்டை அடிப்பது என்பது மட்டுமல்ல, ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வது என்பதில்தான் முழுமையடைகிறது. அதற்கு இப்போது ஃபேஸ்புக் இணையதளமும் ஒரு கருவியாகி விட்டது என்பதை மறுக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com