மைக்ரோசாப்ட்டின் புதிய மடிக்கணினி - சர்ஃபேஸ் புக்!

கணினி என்றாலே மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம்தான் என்ற நிலையுள்ளது. இதற்கு காரணம் கணினியில் இயக்கப்படும் மென்பொருள்கள் (செயலிகள்) பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கத்தக்க வகையில் வெளிவருகிறது. இதனால் விண்டோஸ், வளர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளது.
மைக்ரோசாப்ட்டின் புதிய மடிக்கணினி - சர்ஃபேஸ் புக்!
Updated on
1 min read

கணினி என்றாலே மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம்தான் என்ற நிலையுள்ளது. இதற்கு காரணம் கணினியில் இயக்கப்படும் மென்பொருள்கள் (செயலிகள்) பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கத்தக்க வகையில் வெளிவருகிறது. இதனால் விண்டோஸ், வளர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளது.

இதேபோல செல்லிடப்பேசி என்றாலே கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம்தான் என்ற நிலையுள்ளது. இதற்கு காரணம் செல்லிடப்பேசியில் இயக்கப்படும் ஆப்ஸ்கள் (செயலிகள்) பெரும்பாலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டே இயங்கத்தக்க வகையில் வெளிவருகிறது. டேப்லெட் எனப்படும் சிறிய வகை தொடுதிரையிலான கணினியிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளமே செயல்படுகிறது.

இதனால் ஆண்ட்ராய்டும் வளர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளது. இவ்வாறு விண்டோஸம் ஆண்ட்ராய்டும், கணினி மற்றும் செல்லிடப்பேசி என இருவேறு பாதையில் பயணித்து உச்சத்தில் உள்ளன.

இந்நிலையில் கணினித்துறை மட்டுமின்றி செல்லிடப்பேசியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக சிரத்தை எடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாகதான் நோக்கியா செல்லிடப்பேசி நிறுவனத்தை வாங்கி அதில் விண்டோஸ் இயங்குதளத்தை புகுத்தியது.

ஆனால் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதள செல்லிடப்பேசியில் பயன்படுத்தும் வகையில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட செயலிகள் உள்ளன. விண்டோஸ் இயங்குதள செல்லிடப்பேசியில் பயன்படுத்தும் வகையில் சில ஆயிரம் செயலிகளே உள்ளன. இதனால் செல்லிடப்பேசி விற்பனையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியவில்லை.

இந்நிலையில் அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், கணினியில் கோலோச்சும் விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பரிணாமமாக விண்டோஸ்-10 என்ற இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுக விழாவில் விண்டோஸ்-10 இயங்குதளத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதள செயலிகளையும் இயக்கமுடியும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்தது.

தற்போது இந்நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள சர்ஃபேஸ் புக் மடிக்கணினியிலும் இந்த விண்டோஸ்-10 இயங்குதளமாக உள்ளது.

ஏற்கெனவே தோஷீபா, டெல், ஹெச்சிஎல், ஹெச்பி என பல்வேறு நிறுவனங்கள் மடிக்கணினி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் மடிக்கணினி தயாரிக்கப்படுவதால் பயனாளிகளிடையே ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்.

சர்ஃபேஸ் புக் எனும் பெயரிலான இந்த மடிக்கணினி அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. 13.5 அங்குல திரை அளவு, இன்டெல் கோர் ஐ5, ஐ7 பிராஸசர்கள், கிராபிக்ஸ் வடிவமைப்பதற்கான சிறந்த தொழில்நுட்பம், 1 டெரா பைட் சேமிப்புத் திறன், தொடுதிரை, 700 கிராம் எடையுடன் இந்த மடிக்கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 12 மணிநேரம் வரை இயக்கலாம். விண்டோஸ்-10 இயங்குதளமாக உள்ளது.

இந்த மடிக்கணினியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் விசைப்பலகையிலிருந்து திரையை தனியாக பிரித்து எடுத்து டேப்லெட் கணினியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆப்பிள் மேக்புக் மடிக்கணினியைவிட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கும் திறன் வாய்ந்தது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் குறைந்தபட்ச விலை ரூ. 97 ஆயிரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com