உறை பனி உலகில்!

பூமியின் வட துருவமும், தென் துருவமும் காந்தத்தின் இரு முனைகள் போல் இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும். சூரியனில் இருந்து வரும் அணுக் கதிர்களால், பூமியின் காந்த வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை.
உறை பனி உலகில்!
Updated on
1 min read

பூமியின் வட துருவமும், தென் துருவமும் காந்தத்தின் இரு முனைகள் போல் இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும். சூரியனில் இருந்து வரும் அணுக் கதிர்களால், பூமியின் காந்த வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை. காரணம் பூமியின் அணுக் கதிர்கள், சூரியஅணுக் கதிர்களை நேருக்கு நேராய் எதிர்கொண்டு, இது எங்கள் ஏரியா, உள்ளே வராதே என நெஞ்சம் நிமிர்த்தி நிற்பதுதான்.

ஆனாலும் பூமியின் வட துருவத்திலும், தென் துருவத்திலும் இந்தக் காந்த வட்டம் மிகவும் குறைவாக இருக்கும். எனவே சூரியனின் கதிரியக்க அணுக்கள் இவ்விரு பகுதிகளிலும், பூமிக்கு மிக அருகில் வருகின்றன. அப்படி பூமிக்கு மிக அருகில் வரும் கதிரியக்க அணுக்களும், வட தென் துருவ கதிரியக்க அணுக்களும், ஒன்றை ஒன்று நேருக்கு நேராய் சந்தித்து, வான வீதியில், ஒரு மாபெரும் மல்யுத்தத்தினையே நடத்தும்.

இந்த மின் காந்த மோதல்களால் வானில், வண்ண ஜாலமே உருவாகும். நாம் உலகின் எப்பகுதியிலும் இதுவரை கண்டிராத ஒரு வாண வேடிக்கை, தென் துருவத்தில் அன்று அரங்கேறிக் கொண்டிருந்தது.

கர்னல் அவர்கள் உறைபனியில் மல்லாந்து படுத்துக் கொண்டு முழுக் காட்சியினையும் கண்டு ரசிக்கத் தொடங்கினார். உறை பனி உலகில் இத்தனை நாள் பட்ட துன்பமெல்லாம், இக் காட்சியினைக் கண்ணாரக் காணத் தானோ என்று எண்ணி எண்ணி வியந்தார். மின் காந்த மோதல்களால் வானமானது, பலவித வண்ணங்களில், பலவித உருவங்களில், நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருந்தது.

ஐந்தாவது குளிர்காலக் குழுவினருக்கு இயற்கை அளித்த விருந்து இந்த வண்ண ஜாலம். இவ்வாறாக கர்னல் கணேசன் அவர்களின் தலைமையில், இக் குழுவினர், அண்டார்டிகாவில் செலவிட்ட நாட்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 480 நாட்கள்.

(கரந்தை ஜெயக்குமார் -http:karanthaijayakumar.blogspot.com)

மபா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com