குளிர் தாங்க முடியவில்லையா? இதோ ஓர் ஆடை!

குளிரைத் தாங்க முடியவில்லை... என்ன செய்வது? என்று புலம்புகிறவர்கள் ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் இருப்பார்கள்.
குளிர் தாங்க முடியவில்லையா? இதோ ஓர் ஆடை!

குளிரைத் தாங்க முடியவில்லை... என்ன செய்வது? என்று புலம்புகிறவர்கள் ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் இருப்பார்கள்.

குளிர் என்றால் சாதாரணக் குளிர் அல்ல. கடுங்குளிர். ஏதாவது சூடு பட்டால் கொப்புளம் வரும். இது எல்லாருக்கும் தெரியும். கடும் குளிரால் தோலில் வீக்கம் ஏற்படும். அவ்வளவு குளிர் உள்ள பகுதியில் வாழ்ந்துதான் தீர வேண்டும் என்றால் என்ன செய்வது? கதகதப்பான

கம்பளி ஆடையை ஒன்றுக்குப் பத்தாக உடம்பில் சுற்றிக் கொள்ளலாம். ஆனால் எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் அவ்வாறு சுற்றிக் கொண்டிருக்க முடியாது.

குளிரைத் தாங்குவதற்கு என்று நிறைய ஆடைகள் ஏற்கெனவே உள்ளன. மார்புப் பகுதியில் குளிர் தாக்காமல் தடுப்பவையே அவற்றில் அதிகம். முதுகுப் பகுதியில்?

இப்போது வந்துள்ள "குளிர் தாங்கும் ஆடை' ஒன்று இந்தக் குறைகள் எதுவுமில்லாத ஒன்றாக இருக்கிறது.

இந்த ஆடையில் வெப்பமூட்டும் பேட்கள் உள்ளன. மார்பு, வயிற்றுப் பகுதிக்கு இரண்டு. நடுமுதுகுப் பகுதியில் ஒன்று. இந்த ஆடையை அணிந்து கொண்டால், வெளியில் உள்ள குளிரால் உடல் பாதிக்கப்படாது. மேலும் உடலின் வெப்பநிலையை 41 டிகிரி சென்டிகிரேடுக்கு குறையவிடாது.

வெப்பமூட்டும் இந்த பேட்கள் மின்சாரத்தால் இயங்குகின்றன. அவற்றை ஒருமுறை சார்ஜ் செய்தால், 12 மணி நேரம் வரை இயங்கும்.

உடலில் மாட்டிக் கொள்ளும் ஆடை என்கிறீர்கள். மின்சாரம் சார்ஜ் ஆகும் என்கிறீர்கள். ஷாக் அடிக்காதா? வெப்பம் ஏற்படும் என்கிறீர்கள். வெப்பத்தால் இதில் உள்ள வயர்கள் உருகிவிடாதா? சரி இதில் எதுவுமே இல்லையென்றாலும் இந்த ஆடையைத் துவைப்பது எப்படி? துவைத்தால் இந்த வெப்பமூட்டும் பேட், சர்க்யூட் எல்லாம் நாசமாகிவிடாதா? இப்படி நிறையக் கேள்விகள் எழுந்தன. இவை எல்லாவற்றுக்கும் இல்லை என்ற ஒரே பதிலைத்தான் சொல்கிறார்கள் இந்த ஆடையை உருவாக்கியிருப்பவர்கள்.

இந்த வெப்பமூட்டும் ஆடையைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டுமா? பாருங்கள் http://www.ventureheat.com  என்ற இணையதளத்தை.

நமக்கு இந்த ஆடையெல்லாம் தேவைப்படாது. ஏதாவது ஏஸி பொருத்தப்பட்ட ஆடை இருந்தால் சொல்லுங்கள் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com