நெட் தேர்வு: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்பு நெட் தேர்வு எழுத உங்களுக்குத் தகுதி உள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நெட் தேர்வு: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
Updated on
2 min read

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்பு நெட் தேர்வு எழுத உங்களுக்குத் தகுதி உள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நெட் தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பின்பு அதன் நகலை அந்தந்தப் பல்கலைக்கழகப் பதிவாளருக்குத் தேவையான இணைப்புகளுடன் அனுப்ப வேண்டும்.

உங்களுடைய நெட் ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் மூலமாகத் தேர்வு நுழைவுச் சீட்டு வழங்கப்படவில்லை என்றால், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததால் நெட் தேர்வு எழுத அனுமதியளித்தாலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவே இறுதியானது.

நெட் தேர்வு விண்ணப்பப் படிவத்துடன் (ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் நகலும் வருகைப் பதிவுப் படிவமும் இணைத்து) பணம் செலுத்தியதற்கான வங்கிச் சலானுடன் மற்ற நகல்களையும் இணைத்து நெட் ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் பதிவாளர் / முதல்வர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

நெட் ஒருங்கிணைப்பு நிறுவனத்திடமிருந்து தேர்வு நுழைவுச் சீட்டைத் தேர்வு எழுதுவோர் பெறவில்லை என்றால், தங்களின் தேர்வு மையம் குறித்து இணையதளம் மூலமாகத் தெரிந்து கொண்டு, குறைந்தது தேர்விற்குப் பத்து நாள்களுக்கு முன்பே தேர்வு நுழைவுச் சீட்டை நகல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நெட் தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு எழுதுவோர் புகைப்பட அடையாள அட்டை, ஆன்லைன் தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.

தேர்வு எழுதுவோரின் தேர்வு மையம், தேர்வு எழுதுவதற்கான இருக்கை ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு நெட் தேர்வு ஒருங்கிணைப்பு நிறுவனம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் இதில் ஏற்படும் தவறுகளைத் தேர்வு எழுதுபவர்களே சரி செய்து கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நெட் ஒருங்கிணைப்பு நிறுவனத்தையோ, தேர்வு நாளையோ எந்தக் காரணமும் கூறாமல் மாற்றிக் கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அறிவிக்கப்பட்ட இறுதி நாட்களுக்குப் பின்பு வந்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

நெட் தேர்வு எழுதுவோருக்குப் பயணப்படி வழங்கப்பட மாட்டாது.

நெட் தேர்வு எழுதும் மாணவர்கள் மேற்கொள்ளும் பரிந்துரைகள் அவர்களைத் தகுதி இழக்கச் செய்யும்.

தேர்வுக் கூடத்திற்குள் கணிப்பான் (Calculator), லாக் டேபிள்ஸ் (Log tables) கைபேசி, பேஜர்ஸ் மற்றும் மின்னணுப் பொருள்கள் (உப்ங்ஸ்ரீற்ழ்ர்ய்ண்ஸ்ரீ) வைத்துக் கொள்ள அனுமதியில்லை.

தாள் ஒன்றை எழுதாத மாணவர்கள் தாள் இரண்டு, தாள் மூன்று ஆகிய தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மாணவர்கள் வினாத்தாளிலிருந்து எந்த வினாவையும் தேர்வு நுழைவுச் சீட்டிலோ அல்லது வேறு தாள்களிலோ எழுதிக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டியுள்ள புகைப்படம், கையொப்பம் ஆகியவை வருகைப் பதிவுத்தாளிலும் தேர்வு நுழைவுச் சீட்டிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மாறி இருக்கக் கூடாது.

விண்ணப்பப் படிவ நகல், வருகைப் பதிவுத்தாளின் நகல் ஆகியவற்றைத் தங்களின் தேவைக்காக மாணவர்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.

யு.ஜி.சி. தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ள விண்ணப்பப் படிவத்தையே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த வடிவிலான விண்ணப்பப் படிவத்தையும் யு.ஜி.சி. ஏற்றுக் கொள்ளாது.

விண்ணப்பப் படிவத்தை நேரடியாக புதுதில்லி / ஹைதராபாத் அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது. அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நெட் ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்கே அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் மூலம் நெட் தேர்விற்கு விண்ணப்பிக்காமல் விண்ணப்பப்ஹ படிவத்தை நெட் ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்கு அனுப்பக் கூடாது. அவ்வாறு அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

யு.ஜி.சி.யின் அறிவுரையின்படி விண்ணப்பப் படிவம் அனைத்து வகைகளிலும் முழுமை பெற்றதாக இருக்க வேண்டும். முழுமை பெறாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும்.

நெட் தேர்வின் மதிப்பெண்கள் யு.ஜி.சி.யின் இணையதளத்தில் (www.ugcnetonline.in) தேர்வு முடிவுகள் வெளியான சில நாள்களில் வெளியிடப்படும். மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கோ தோல்வியுற்றதற்கோ யு.ஜி.சி. மதிப்பெண் பட்டியல் வழங்காது.

நெட் தேர்வு வினாவிற்கான விடைகள் குறித்துத் தேர்வு முடிவு வெளியான பின்பு ஏதாவதொரு குறை இருப்பின் அதை எழுத்துப்பூர்வமாக Head, UGC net Bureau, South Campus, University of Delhi, Benito Juarez marg, New Delhi - 110 021 எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வினாக்களுக்கான சரியான விடையைத் தரமான நூல்களில் / இலக்கியங்களிலிருந்து சான்று காட்டி ரூ.500க்கான டிடி எடுத்து, (Infavour of Secretary, UGC) தேர்வு முடிவு வெளியான ஒரு மாதத்திற்குள் எழுதி அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் விடைகளை அதற்கான சிறப்புக் குழு முன்னிலையில் வைக்கப்பட்டு மறுவிடை வெளியிடுவது குறித்து ஆராயப்படும். ஏற்கெனவே வெளியான விடைகள் தவறாக இருப்பின் கூடுதலாக உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவோர், ஜெ.ஆர்.எப்.க்குக் கூடுதலாகத் தகுதி பெறுவோர் பற்றி அறிவிக்கப்படும். ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டோருக்கு மாற்றம் இருக்காது.

தேர்வு நடைபெறும் அறையிலிருந்து காலையில் நடைபெறும் தேர்வின்போது 11.30 மணிக்கு முன்பும் பிற்பகல் தேர்வில் 3.30 மணிக்கு முன்பும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

தாள் I, II, III ஆகிய விடைத்தாள்களைத் (OMR Sheet) தேர்வு முடிந்த பின்பு அதை மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும். இருப்பினும் தேர்வு எழுதுவோர் Test Booklet இன் தாள் I, II, III  ஆகியவற்றின் கார்பன் படிகளைத் தேர்வு முடிந்த பின்பு எடுத்துச் செல்லலாம்.

மாணவர்கள் தங்களுக்குத் தேவையான விளக்கங்களை யு.ஜி.சி.யின் இணைய தளங்களான www.ugcnetonline.in  அல்லது www.ugc.ac.in ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கான பொது அறிவுரைகள் நேரடியாக அவர்களுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது.

தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது (No Negative Marks)

யு.ஜி.சி.யின் முடிவே எந்த நிலையிலும் இறுதியானது.

சட்ட அடிப்படையிலான நடவடிக்கைகள் அனைத்தும் புதுதில்லி நீதிமன்றங்களுக்குட்பட்ட எல்லையிலேயே நடைபெற அனுமதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com