கீ போர்டு வாசிப்பில்

உலகில் பல்வேறு கின்னஸ் சாதனை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் கீ போர்டில் பாடல்களை வாசித்து சாதனை புரியும் முயற்சியில் அண்மையில் ஈடுபட்டனர்.
கீ போர்டு வாசிப்பில்
Updated on
1 min read

உலகில் பல்வேறு கின்னஸ் சாதனை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் கீ போர்டில் பாடல்களை வாசித்து சாதனை புரியும் முயற்சியில் அண்மையில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ராஜீவ் நகரை சாய் நரேன், அபிஷேக் குமார்,அஸ்வின் ஆகியோர் இணைந்து "3 பாய்ஸ்' என்ற பெயரில் கீ போர்டில் பாடல்கள் வாசிக்கும் சாதனை நிகழ்ச்சியை நிகழ்த்தினர்.

காலை 7 மணி முதல் இரவு 7.50 மணி வரை 6 இடங்களில் இந்தச் சாதனை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. கின்னஸ் நிறுவனம் அளித்த விதிமுறைகளின்படி இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை 10 நிமிடம் ஓய்வு அளிக்கப்பட்டது.

சாதனை நிகழ்ச்சிகுறித்து மாணவர்கள் அஸ்வின், அபிஷேக் குமார், சாய் நரேன் ஆகியோர் கூறியது:

""நாங்கள் மூவரும் கடந்த 8 ஆண்டுகளாக தூத்துக்குடியில் உள்ள அய்யப்பன் என்ற மாஸ்டரிடம் கீ போர்டு வாசிக்கும் பயிற்சி பெற்று வருகிறோம். கோயில் திருவிழாக்கள், அரசு நிகழ்ச்சிகளில் சில நிமிடங்கள் மட்டும் பாடல்களை கீ போர்டில் வாசித்துள்ளோம்.

கீ போர்டு வாசிப்பில் கின்னஸ் சாதனை நிகழ்த்த வேண்டும் என எங்களுக்குத் தோன்றியதால் மூவரும் இணைந்து பெற்றோரிடம் கூறினோம். அவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

கின்னஸ் நிறுவனம் வகுத்த விதிமுறைகளை

உள்ளடக்கி தொடர்ந்து 12 மணி நேரம் கீ போர்டு வாசிக்கும் நிகழ்ச்சியை 6 இடங்களில் நடத்தினோம். குருவுக்கு மரியாதை செலுத்தும் பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.

தொடர்ந்து, பக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், கீர்த்தனைகள், ஆங்கில திரைப்படப் பாடல்கள், ஹிந்தி திரைப்பட பாடல்களை வாசித்தோம். பின்னர், தமிழ் திரைப்படப் பாடல்களை 1955 முதல் 2015 வரை கடந்த 60 ஆண்டுகளில் மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்த 60 பாடல்களைத் தேர்வு செய்து வாசித்தோம். இறுதியில் தேசிய கீதத்துடன் நிறைவு செய்தோம்.

15 வயதுக்குள்பட்ட மாணவர்கள் கீ போர்டில் தொடர்ந்து 12 மணி நேரம் 6 இடங்களில் இடைவிடாது பாடல்களை இசைப்பது இதுவே உலகில் முதல்

முறையாகும். மொத்தம் 174 பாடல்களை வாசித்தோம். மக்கள் ஆர்வத்துடன் எங்களது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊக்குவித்தனர்.

12 மணி நேர எங்களது சாதனை நிகழ்ச்சியும் அப்படியே வீடியோ எடுக்கப்பட்டு உடனுக்குடன் ஆன்லைன் மூலமாக கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இருப்பினும், எங்களது நிகழ்ச்சி கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்பது இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் தெரியவரும்.'' என்று மூவரும் ஒன்றாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com