குழந்தைத் தொழிலாளர்கள்

பள்ளிப்பாடம் கற்காதுதொழிற்கூடத்தில்
Updated on
1 min read

பள்ளிப்பாடம் கற்காது
தொழிற்கூடத்தில்
அனுபவப்பாடம் கற்க வந்த
பூ மொட்டுகள்

பிள்ளைக் கூட்டங்கள்
பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்
சமயத்தில்
இவர்கள்
சிமெண்ட்சாந்தையையோ
ஹோட்டல் பெஞ்சையையோ
துடைக்கும் அவலம்

பள்ளிக்கூட வாயிலில்
மழைக்குக்கூட ஒதுங்காத
பிஞ்சின் ஆரம்பத்திலேயே
குடும்பச் சுமைகள்...

எனினும்
வீட்டில் கணக்கற்றவர்கள்
காட்டும் வழியில் பாவம்
ஒரு புத்தகம்
வாசிக்கப்படாமலேயே
வீணாகிப் போகிறது

திருவிழாக் கடைகளில்
சந்தைகளில்
பேருந்து நெரிசல்களில்
என
தன் வயிற்றுப் பாட்டோடு
வீட்டுப் பாட்டிற்காகவும்
உழைக்கும் சிறார்களின்
பிஞ்சு கைகளில்
எத்தனை எத்தனை காய்ப்புகள்
 

புத்தக மூட்டையைச் சுமக்கும்
வயதில்
பழைய பிளாஸ்டிக் காகிதங்களை
பொறுக்கி விற்கும்
இச்சிறிய
இதயங்களுக்குள் சென்று
யாராவது
நிஜக்கனவினையாவது
தட்டிப்பார்த்ததுண்டா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com