என்ன படிக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்!

பிளஸ் டூ தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் பெற்றோர்களும், மாணவ, மாணவியர்களும் பல கனவுகளுடன் இருப்பார்கள். தனது மகனை / மகளை மருத்துவப்படிப்பில் சேர்க்க வேண்டும்...
என்ன படிக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்!

பிளஸ் டூ தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் பெற்றோர்களும், மாணவ, மாணவியர்களும் பல கனவுகளுடன் இருப்பார்கள். தனது மகனை / மகளை மருத்துவப்படிப்பில் சேர்க்க வேண்டும்; பொறியியல் படிப்பில் சேர்க்க வேண்டும்; பிஎஸ்சி விவசாயம் சேர்க்க வேண்டும்; கலை அறிவியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட படிப்பில் இடம்பிடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறுவதும் நிறைவேறாததும் தேர்வு முடிவு வந்தவுடன் தெரிந்துவிடும்.

அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்று எண்ணியிருந்த நிலையில் அதிக மதிப்பெண் கிடைக்காததால், மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் போனால் தவியாய்த் தவிக்க வேண்டியதில்லை.

பெற்றோரும் தங்களின் மகள் அல்லது மகனுக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை என்றால், அடுத்து என்ன செய்யலாம்; என்ன படிக்கலாம்; எந்தப் படிப்புத் தமது பிள்ளைக்குத் தகுந்ததாக இருக்கும் என்று ஆராய்ந்து அல்லது தகுந்த கல்வியாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றுப் படிப்பைத் தொடரச் செய்ய வேண்டும். பிறரிடம் கருத்துக் கேட்பது கௌரவக் குறைச்சல் என்று நினைக்கக் கூடாது.

எந்தப் படிப்பைப் படித்தாலும் அதில் நமது திறமையைத்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை விரும்பி ஆர்வமாகப் படிக்க வேண்டும்.

எந்த ஒரு படிப்பிலும் மாணவர்களுக்கு இலக்கு வேண்டும். அந்த இலக்கை அடைய கடுமையாக முயற்சிக்க வேண்டும். தோல்விகளைக் கண்டு துவளக் கூடாது. தோல்விகளை எவ்வாறு வெற்றியின் படிக்கற்களாக மாற்றலாம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

காலமாற்றத்தால் நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இணையம் போன்றவற்றின் வரவால் படிக்கும் பழக்கத்தை விட்டுவிடக் கூடாது. எதையும் உற்று நோக்கி ஆழமாகப் படிக்க வேண்டும். அதேசமயம் வெறும் புத்தகப் புழுவாக இருந்துவிடக் கூடாது. நல்ல செயல்திறனுக்கு வழிகோலும் படிப்பு, பயிற்சி, தேர்ச்சி ஆகியவற்றை மாணவர்கள் தேடிக்கொள்ள வேண்டும். செயல்திறன் மிக்கவர்கள் மட்டுமே சாதனையாளர்களாகின்றனர். ஒரு பணக்காரனாக உருவாவதைவிட ஒரு சிறந்த கல்வியாளனாக, தொழிலதிபராக, சமூக சேவகராக, பொருளாதார நிபுணராக, சிந்தனையாளராக, மனிதநேயம் உள்ளவராக உருவாக வேண்டும்.

அத்துடன் +2 படித்து முடித்தவுடன் என்ன படிப்புப் படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதில் குழப்பம் அடையக் கூடாது. நாம் எடுக்கக்கூடிய முடிவு இறுதியானதாக, எதிர்காலத்தை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஏன் இப்படிப்பட்ட முடிவை எடுத்தோம் என்று பிற்காலத்தில் வருந்துவதாக இருக்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com