பால் வள அறிவிய−ல் எம்எஸ்சி பட்டம்!

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு உற்பத்தியில் இந்தியா தடையற்ற வளர்ச்சி பெற்று வருவதைப் போல், பால் பதப்படுத்துதல் மற்றும் பக்குவப்படுத்துவதிலும் அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பால் வள அறிவிய−ல் எம்எஸ்சி பட்டம்!
Updated on
1 min read

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு உற்பத்தியில் இந்தியா தடையற்ற வளர்ச்சி பெற்று வருவதைப் போல், பால் பதப்படுத்துதல் மற்றும் பக்குவப்படுத்துவதிலும் அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக, பால் உணவு சார்ந்த படிப்புகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. குறிப்பாக, பால் பதப்படுத்துதல் மற்றும் பக்குவப்படுத்துதல் துறையில் பெருகி வரும் வேலைவாய்ப்புகளுக்கு, திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால், பால் வளத் துறையில் திறன் பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பால் வள அறிவியல் பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதைப் பற்றி அங்கு பணிபுரியும் பேராசிரியர் எம்.சீதாலட்சுமி, நம்மிடம் கூறியதிலிருந்து...

"" தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் ஆகிய 4 மாநிலங்களில், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மட்டுமே இந்த பாடப்பிரிவு உள்ளது. பிஎஸ்சி நுண்ணுயிரியல், தாவரவியல், விலங்கியல், உயிரி வேதியல், ஊரக மேம்பாட்டு அறிவியல், மனையியல், உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய பிரிவுகளில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு எம்எஸ்சி பால் வள அறிவியல் துறையில் பயில வாய்ப்பளிக்கப்படுகிறது.

60 சதவீத செய்முறை பயிற்சியுடன் நடத்தப்படும் இந்த பாடப்பிரிவுக்கு ஆண்டுக்கு 25 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறும். பால் கறப்பது முதல் பக்குவப்படுத்துவது வரையிலும், பால் பொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

பால் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளதால், திறன் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலையில், தமிழகம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் சுமார் 70 சதவீத பணியிடங்களுக்கு பயிற்சி பெற்ற இளைஞர்கள் தேவையாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் பால் பொருள்களில், 45 வகையான மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பால் வள அறிவியலில் முதுகலை பட்டம் மட்டுமின்றி, முனைவர் பட்டம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும், காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும், பகுதி நேர சான்றிதழ் படிப்பும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இதன் மூலம், தனியார் பால் பண்ணை மற்றும் பால் சார்ந்த நிறுவனங்களிலும், ஆவின் போன்ற அரசுத் துறை நிறுவனங்களிலும் உடனடி வேலைவாய்ப்பு பெற முடியும். 2 ஆண்டு படிப்பு முடியும் முன்னரே, வளாக நேர்முகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்புக்கான ஆணையைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இத்துறையை தேர்வு செய்துள்ள இளைஞர்களுக்கு எளிது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com