தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள்!

தொழிலாளர்களை திறன் மிக்கவர்களாக உருவாக்கும் வகையில் அவர்களுடைய திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி மையங்களை நாடு முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள்!
Updated on
1 min read

தொழிலாளர்களை திறன் மிக்கவர்களாக உருவாக்கும் வகையில் அவர்களுடைய திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி மையங்களை நாடு முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தொழில் நிறுவனங்களுக்கு திறன் மிக்க தொழிலாளர்களின் தேவை அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருவதால் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் அவசியமானவையாகிவிட்டன. 2016 பட்ஜெட்டில், அடுத்து வரும் 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக நாடு முழுவதும் 1500 பன்முக திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

விவசாயம், ஆட்டோமொபைல், அழகுக்கலை, கட்டுமானத்துறை, எலக்ட்ரானிக்ஸ், ஜெம் மற்றும் ஜூவல்லரி, மருத்துவம், பிளம்பிங், தகவல் தொழில்நுட்பம், மீடியா, தோல், ரப்பர், பிளாஸ்டிக், செக்யூரிட்டி, டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறையில்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் மூலமாக வழங்கி வருகிறது.

இந்தியா முழுவதும் தரமான, குறுகிய கால பயிற்சியினை அளிக்க தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பயிற்சி பெற விரும்புபவர்கள் தங்களுக்குத் தேவையான பயிற்சிகளை எந்தத் துறையில், எங்கு பெறலாம் என்று தெரிந்து கொள்ள www.http:nscsindia.org எனும் இணைய தளத்தைப் பாருங்கள்.

விவசாயம் - www.asci-india.com

ஆட்டோமொபைல் - http:asdc.org.in

அழகுக்கலை பயிற்சி - http:bwssc.in

கட்டுமானத் தொழில் - http:www.csdcindia.org

வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு - www.bfsissc.com

ஹெல்த்கேர் - www.healthcare-ssc.in

மின்னணு துறை - www.essc-india.org

பிளம்பிங் - www.ip-ssc.com

தோல் தொழில் - http:www.indialeatherssc.org

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com