செல்போனில் புதிய வரவு!

சாம்சங், மைக்ரோமேக்ஸ், ஜியோனி, எல்ஜி உள்ளிட்ட பல்வேறு நிறுவன செல்போன் தயாரிப்புகளில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளமே பிரதானமாக உள்ளது.
செல்போனில் புதிய வரவு!
Updated on
1 min read

சாம்சங், மைக்ரோமேக்ஸ், ஜியோனி, எல்ஜி உள்ளிட்ட பல்வேறு நிறுவன செல்போன் தயாரிப்புகளில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளமே பிரதானமாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பு செல்போன்களில் விண்டோஸ் இயங்குதளமாக உள்ளது. பிளாக்பெர்ரி நிறுவன செல்போன்களில் பிளாக்பெர்ரி இயங்குதளமாக உள்ளது. இதோபோல ஆப்பிள் நிறுவன தயாரிப்பு செல்போன்களில் அந்நிறுவனத்தின் ஐஓஸ் (iOS) இயங்குதளமாக உள்ளது.

இவ்வாறு குறிப்பிட்ட அந்தந்த இயங்குதளங்களில் இயங்குவதற்கு ஏற்பதான் செயலிகள் வெளிவருகின்றன. அதில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ப லட்சக்கணக்கான செயலிகள் உள்ளதாலும், பெரும்பாலும் இலவசமாகக் கிடைப்பதாலும் ஆண்ட்ராய்டு இயங்குதள செல்போன்கள் இந்திய சந்தையில் கணிசமான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன.

ஆனால் ஆப்பிள் ஐபோன்களின் விலை அதிகம் என கருதப்படுவதால் இந்தியாவில் மேல்தட்டு மக்களிடம் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன. ஆனாலும் பரவலாக உலக அளவில் விற்பனையில் முதலிடம் வகிப்பது என்னவோ ஆப்பிள் ஐபோன்கள்தான். வேகமான இயக்கம், தகவல் பாதுகாப்பு முக்கியத்துவம், மெனுக்கள் வடிவமைப்பு மற்றும் தெளிவான புகைப்படம் எடுக்கும் வகையிலான கேமரா வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது ஆப்பிள் ஐபோன்.

எனவே ஆப்பிள் ஐபோன்களின் இடத்தைத் தொடுவதற்கு மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் உலக அளவில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலும் தனது நிறுவனத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக இந்தியாவில் தனது நேரடி விற்பனை நிலையத்தை துவங்குவதற்காக மத்திய அரசிடம் அனுமதியும் கோரியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக தனது புதிய தயாரிப்பான ஆப்பிள் 5எஸ்இ மாடலை மார்ச் மாத இறுதி வாரத்தில் விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது. இதன் விலை விவரம் மற்றும் வடிவமைப்புகளை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அனைவரும் எளிதாக வாங்கத் தக்க வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பரவலாகவே செல்போன் உபயோகிப்பாளர்களிடையே ஆப்பிள் ஐபோன் மீது தீராத மோகம் உண்டு. ஆனால் விலை அதிகமாக இருப்பதால் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதள செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன்கள் வெளியாகிறது என்பதால், அதன் போட்டியைச் சமாளிக்க கூகுள் (ஆண்ட்ராய்டு) மற்றும் மைக்ரோசாப்ட் (விண்டோஸ்) நிறுவனங்கள் ஆயத்தமாகிவிட்டதாகவே தெரிகிறது.

ஏனென்றால் ஆப்பிள் 5எஸ்இ வெளியாகும் காலகட்டத்தில் கூகுளும் தனது நெக்சஸ் 5எக்ஸ் மாடல் செல்போன்களுக்கு ரூ. 4000 வரை தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com