3 டி விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை திரைப்படங்கள் பிலிம் சுருள் மூலமாகத்தான் திரையிடப்பட்டன.
3 டி விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ்!
Updated on
1 min read

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை திரைப்படங்கள் பிலிம் சுருள் மூலமாகத்தான் திரையிடப்பட்டன. அப்போது, வெட்டப்பட்ட பிலிம் துண்டுகளில் உள்ள படங்களை சிறுவர்கள் லென்ஸ் உதவியால் உருப்பெருக்கம் செய்து பார்த்து, விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் பிலிம்களைச் செருகி அதிலுள்ள படங்களை பெரிய அளவில் பார்ப்பதற்கு ஏற்ப விளையாட்டு கருவிகளும் விற்பனைக்குக் கிடைத்தன.

தற்போது அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப, இதுபோன்ற கருவிகள் தரம் உயர்ந்து செல்போன்களில் உள்ள வீடியோ காட்சிகளைக் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ் ஹெட்செட் என்ற கருவி பிரபலமாகி வருகின்றது.

இந்த கருவி ஹெல்மெட் அணிவது போல, கண்கள் மற்றும் தலையுடன் பொருத்தும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இதில் செல்போனை வைப்பதற்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது செல்போனில் உள்ள வீடியோ காட்சியை இயங்கச் செய்து இக்கருவியில் பொருத்தி விட்டு விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ் வழியே, காட்சிகளை நேரடியாகக் காண்பதுபோன்ற உணர்வுடன் முப்பரிமாண முறையில் கண்டு மகிழலாம்.

சில நிறுவன தயாரிப்புகளில், செல்போன்களில் உள்ள விளையாட்டுகளை இயக்கும் வகையில் புளுடூத் கேம் கண்ட்ரோலர் கருவியும் இணைப்பாகக் கிடைக்கிறது.

நீண்ட பிரயாணங்களின் போது பிறருக்குத் தொல்லை தாராத வகையில், திரையரங்கில் காண்பது போல காட்சிகளைப் பெரிய அளவில் கண்டும், விளையாடியும் மகிழலாம் என்பது தனிச்சிறப்பு. தரம் மற்றும் தயாரிப்பு, நிறுவனங்களுக்கு ஏற்ப ரூ. 200 முதல் 4000 வரையிலான விலையில் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com