வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வணிகவரிச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்றிதழ்: வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்!

வணிகவரிச் சட்டத்தின் கீழ் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பதிவுச் சான்றிதழை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :9 மே 2016, 2:12 pm

வணிகவரிச் சட்டத்தின் கீழ் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பதிவுச் சான்றிதழை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்காக தமிழக அரசு புதியதாக ஈசி டேக்ஸ் - டோட்டல் சொல்யுஷன் என்ற நோக்கத்தில் இணைய தளத்தை வடிவமைத்துள்ளது. அது தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்த புதிய இணைய தளம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரித்துறை அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளும் இந்த இணையதளத்தின் வாயிலாக, ஆன்லைன் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக பதிவுச் சான்றிதழ் பெறுதல், பதிவுச் சான்றிதழை ரத்து செய்தல், வணிகர்களுக்கு விற்பனை சம்பந்தமான படிவங்களைப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இந்த புதிய இணைய தளத்தின் வாயிலாக நடைபெற்று வருகின்றன.

இந்த இணைய தளத்தின் வாயிலாக புதிதாக பதிவுச் சான்றிதழ் பெற விரும்புபவர்கள் வீட்டில் கணினி, இணைய தள வசதி இருந்தால் தங்களுடைய வீடுகளில் இருந்தே கூட, சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய இணைய தளத்தில் தங்களுடைய பெயர் மற்றும் கடவுச் சொல்லை பதிவு செய்ய வேண்டும். மேலும் பான் அட்டை எண், இ-மெயில் முகவரி, செல்போன் எண் ஆகியவை அடிப்படையாக தேவைப்படுகிறது. அவற்றைப் பதிவு செய்த பிறகு, பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி தங்களுக்கென உருவாக்கப்பட்ட வணிகவரி இணையதள கணக்கிற்குள் உள் நுழைந்து, ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் தேவையென குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, பிறகு தேவையான ஆவணங்களின் நகல்களைப் பதிவேற்றம் செய்த பிறகு, விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, அதில் கையெழுத்திட்டு, சம்பந்தப்பட்ட பகுதியின் வணிக வரித்துறை அலுவலகத்தில் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும். அதனை துறை அலுவலர்கள் சரிபார்த்து அனைத்தும் சரியாக இருந்தால் பதிவுச் சான்றிதழை ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரரின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்த எளிதான முறையைப் பின்பற்றி வணிகர்கள், தொழில்துறையினர் வணிகவரித்துறையின் கீழ் பதிவுச் சான்றிதழைப் பெறலாம்.

தமிழக அரசின் வணிக வரித்துறை புதிய இணைய தள முகவரி : https:ctd.tn.gov.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.