குழாய் வழியே அதி வேகப் பயணம்!

பயணம் என்பது நீர்வழிப் பாதையாகவோ, வான் வழியாகவோ, தரை வழியிலோ, சுரங்கவழி பாதையாகவோதான் இருக்கிறது. தற்போது
குழாய் வழியே அதி வேகப் பயணம்!
Updated on
1 min read

பயணம் என்பது நீர்வழிப் பாதையாகவோ, வான் வழியாகவோ, தரை வழியிலோ, சுரங்கவழி பாதையாகவோதான் இருக்கிறது. தற்போது 5வது வழித்தடமாக அமைந்துள்ளதுதான் ஹைப்பர்லூப் வழித்தடம்.

பல்வேறு நிறுவனங்களைப் பங்குதாரர்களாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள ஹைப்பர் லூப்-ஒன் என்ற அமெரிக்க நிறுவனம் இந்த புதிய வழித்தடத்திற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.

ஒரு ராட்சத  குழாயினுள் கேப்சூல் போன்ற பயணிகள் மற்றும் சரக்கு பெட்டியை விரைவாக செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடிகிறது. இதன் மூலம் விபத்துகள் தடுக்கப்படுவதுடன், வேகத்தையும் அதிகரிக்க முடிகிறது.  அதாவது நெடுந்தொலைவை குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் பாதுகாப்பான முறையில் பயணிப்பது என்ற கொள்கையின் அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், அதன்படி இத்திட்டத்திற்கான ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதற்கட்டமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் வரையில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2018 இறுதியில் அல்லது 2019 தொடக்கத்தில் கலிபோர்னியாவில் முதல் பயணம் தொடங்கப்படும்.

 இதற்கு முன்னோட்டமாக வட அமெரிக்காவின் கிரேட் பேசின் அருகேயுள்ள நிவேதா பாலைவனத்தில் கடந்த வாரம் சோதனை அடிப்படையில் தரைவழிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் ஒரு மணிநேரத்தில் 700 கி.மீ. தூரத்தை இந்த என்ஜின் கடந்துள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையும் போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மணிக்கு 1200 கி.மீ. தூரம் என்ற இலக்கை அடைய முடியும். அதாவது இந்த வேகம் ஜெட் விமானத்தின் வேகத்துக்கு இணையானது.

கேப்சூல்கள் போன்ற பயணிகள் பெட்டி தயாரிப்பில் வைப்ரானியம் (vibranium) என்ற ஒரு வகை உலோகம் பயன்படுத்தப்படுகிறது. வைப்ரானியம் என்பது சென்சார்கள் பதிக்கப்பட்ட கார்பன் பைபர் ஆகும். இவை கேப்சூல்களின் வெப்பநிலை, இயக்கம் உள்ளிட்டவற்றை  கட்டுப்பாட்டு அறைக்கு தானியங்கி முறையில் அனுப்பிவிடுவதாகவும் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் நம் ஊரில் செயல்படுத்தப்படுத்தப்பட்டால் சென்னையில் புறப்பட்டு திருநெல்வேலியில் வந்து அல்வா வாங்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்வதற்கு ஆகும் நேரம் சுமார் 55 நிமிடங்களே. அதுவும் மிகவும் பாதுகாப்பாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com