இணைய வெளியினிலே!

நான் சென்னைக்கு வந்த புதுசு அது. பாண்டி பஜாரில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு முதல் முறையாகப் போயிருந்தேன். இட்லி கேட்டேன். ""காம்போ எதும் சாப்பிடுறீங்களா?'' என்று கேட்டார் சர்வர். எனக்குப் புரியவில்லை.
இணைய வெளியினிலே!

முக நூலிலிருந்து....

நான் சென்னைக்கு வந்த புதுசு அது. பாண்டி பஜாரில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு முதல் முறையாகப் போயிருந்தேன். இட்லி கேட்டேன். ""காம்போ எதும் சாப்பிடுறீங்களா?'' என்று கேட்டார் சர்வர். எனக்குப் புரியவில்லை. ""அப்படின்னா சார்?'' என அப்பாவியாக கேட்டேன். ""இட்லி, வடை, கொஞ்சம் பொங்கல் இருக்கும்'' என்றார். ""புதுசாக இருக்கே'' என வாங்கிச் சாப்பிட்டேன். இன்று சரவணவபவனில் மட்டுமல்ல... காம்போ இல்லாத கடைகளே இல்லை.

இப்போ இது எதுக்கு? சொல்றேன்...

எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி. சென்னையில் தி.நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பரிசோதனைகள் முடிந்ததும், மருத்துவமனை தரப்பில் இருந்து பேசினார்கள். ""உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ செய்யணும். காம்போ- வாக எடுத்துக்குறீங்களா?'' என்று கேட்டார்கள். எனக்கு சட்டென்று சரவணபவன் நினைவுக்கு வந்து போனது. ஒருவேளை சாப்பாடும் சேர்த்து போடுவாங்களோ? என யோசித்தபடி, அவர்களிடம் தொடர்ந்து பேசினேன்.

""இந்த காம்போவில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், ஐசியு, சிசியு, டாக்டர் பீஸ் எல்லாம் சேர்த்து மூன்று லட்சம் வரும். இதுவே நீங்க தனித்தனியா எடுத்துகிட்டா அதிகம் ஆகும்'' என்று சொன்னார்கள். எனக்கு மிரட்சியாக இருந்தது. அந்த மருத்துவமனையில், ஹார்ட்டுக்கு, டெலிவரிக்கு, கிட்னிக்கு என தனித்தனி காம்போ இருக்கிறது. அந்த மருத்துமனையில் மட்டுமல்ல... சென்னையில் பல மருத்துவமனைகளில் இந்த காம்போ சிஸ்டம் இருக்கிறதாம்.

- வித்யா குமார்

ரொம்ப நேரமா கரண்ட் இல்லை..

மாறி மாறி போலீஸ் ரோந்து போய்க்கிட்டே இருக்காங்க.

காணாமப் போன கரண்ட கண்டுபிடிக்கறாங்களோ...

- கவிதா பாரதி

ஒவ்வொரு முறையும் தோற்கிறேன். ஒவ்வொரு முறையும் காயங்கள். ஒவ்வொரு முறையும் எழுகிறேன். ஒவ்வொருமுறையும் காதல். ஒவ்வொரு முறையும் துரோகம். ஒவ்வொரு முறையும் களிப்பு. ஒவ்வொருமுறையும் அவமானம். ஒவ்வொரு முறையும் வீழ்ச்சி. ஒவ்வொருமுறையும் சாகசம். நானொரு பாலட் நடனக்காரன். வித்தைகள் கற்றவன். என் வித்தைகள் வெற்றிக்கானவை அல்ல; அவை விழுதலுக்கும் எழுதலுக்குமிடையிலான சூத்திரம்

 அஜயன் பாலா

வலைத்தளத்திலிருந்து...

ஒரு மதுரை இளைஞனும், ஒரு சென்னை இளைஞனும் மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ள குன்றிற்கு கேம்ப் சென்றார்கள். பொழுது சாயவே ஓரிடத்தில் கூடாரத்தினை அமைத்து அதனுள் இருவரும் படுத்தனர்.

இரவு சுமார் மணி மூன்று இருக்கும். சில்லென்று காற்று வீசவே மதுரை இளைஞன் விழித்துக் கொண்டான். நண்பனை எழுப்பிக் கேட்டான், மேலே பார் என்ன தெரிகிறது? என்று.

சென்னை இளைஞன் சொன்னான்:

""நண்பா கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் தெரிகின்றன''

மதுரைக்காரன் கேட்டான்: ""அப்புறம் வேற என்ன தெரிகிறது?''

""வான சாஸ்திரப்படி சொன்னால் அந்த நட்சத்திரங்களைச் சுற்றி பலகோடி கிரகங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது''

""அப்புறம் வேற என்ன தெரிகிறது?''

""ஜோதிட சாஸ்திரப்படி சொன்னால் சனி கிரகம் சிம்ம லக்னத்திற்கு நகர்ந்துள்ளது.''

""உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம்?''

""வானிலை சாஸ்திரப்படி சொன்னால் நாளை மேகமூட்டமிருக்காது''

""டேய்... நம்ம கூடாரத்தை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்பது கூடவா தெரியவில்லை உனக்கு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com