
எல்லாருக்கும் ஏதேனும் ஒரு வகையில் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கான மூல காரணம் முன்வினைப் பயனா அல்லது அவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் இருக்குமிடத்தால் ஏற்படுவதா என்பது குறித்து அலசி ஆராய்ந்து அதற்கான பலன்களையும், அதற்கான பரிகாரங்களைக் கூறவும் ஜோதிட சாஸ்திரம் பயன்படுகிறது.
ஒருவரின் ஜாதக பலன்களைக் கூறுவதற்கு ஜோதிடம் கற்றுத் தேர்ந்த ஜோதிடராக இருக்க வேண்டியது அவசியமாகும். ஜாதகத்தைச் சரியாகக் கணித்து சரியான தகவல்களைக் கூறும் ஜோதிடராக விரும்புகிறீர்களா?
இப்போது ஜோதிடம் தொடர்பான படிப்புகளை பிரபலமான பல கல்வி நிறுவனங்களே அளித்து வருகின்றன. தொலைதூரக்கல்வி வாயிலாகவும் ஜோதிடம் கற்றுத் தரப்படுகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சோதிட படிப்பில் சாஸ்திரம் குறித்த பட்டயம், பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரம் குறித்த படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் :
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் - https://mkudde.org/d iploma.php
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் -http://www.annamalaiuniversity.ac.in/dd e/index.php
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகம் - http://sastra.edu/distance education/
ஸ்ரீ ஹரி ஜோதிட வித்யாலயம் - http://srihariastro.org.in/
Sri Ramanujar Astrology Training & Educa ti on Center - http://www.sriramanujarastros t udies.com/
K.P. Stellar Astrological Research Institute - http://kpastrology.net/
BHUVANA’S COLLEGE OF ASTROLOGY http://www.astrologypalmistryscience.com/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.