கால்நடை  தீவனத்  தயாரிப்பு பயிற்சி!

கால்நடைத் தீவனத் தயாரிப்பு பயிற்சி முடித்தவர்கள் கால்நடைகளுக்கான தீவனம் தயாரிப்பு தொழில் துவங்கி வருவாய் ஈட்டலாம்.
கால்நடை  தீவனத்  தயாரிப்பு பயிற்சி!
Updated on
1 min read

கால்நடைத் தீவனத் தயாரிப்பு பயிற்சி முடித்தவர்கள் கால்நடைகளுக்கான தீவனம் தயாரிப்பு தொழில் துவங்கி வருவாய் ஈட்டலாம்.

கால்நடைகளுக்கான உணவான தீவனங்கள் தயாரிப்பு தொழிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இயற்கையாகக் கிடைக்கும் புல், வைக்கோல், செடிகள், இலைகள் ஆகியவற்றோடு, செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் தீவனங்களும் கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்றன.

கால்நடைகளின் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்திக்கும், அதிக பால் சுரப்பதற்கும் என்று பல்வேறு தீவனங்கள் வழங்கப்படுகின்றன. கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொழில் நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. கால்நடைத் தீவனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதே போல கால்நடைகளுக்கான தீவன தேவையும் அதிகமாகவே உள்ளது.

கால்நடைத் தீவனம் தயாரிப்பதற்கான பயிற்சிகள் பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. அப்பயிற்சியைப் பெற்றவர்கள் தீவன தயாரிப்பு தொழிலில் ஈடுபடலாம். தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் பயிற்சி மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பட்டப்படிப்புகளிலும் சேர்ந்து கால்நடைகளுக்கான தீவன தயாரிப்பு பயிற்சி பெறலாம்.

தீவனத் தயாரிப்பு சம்பந்தமான பயிற்சி பெற:
ICAR- Central Avian Research Institute - http://www.icar.org.in/
Tamilnadu Veterinary and Animal Sciences University - http://www.tanuvas.tn.nic.in/
- எம்.அருண்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com