இணைய வெளியினிலே...

தேவையெனும் போது மட்டும் உங்களை நாடுகிறார்களா?வருத்தம் வேண்டாம்...
இணைய வெளியினிலே...
Updated on
1 min read

முக நூலிலிருந்து....
* சூரியனை எத்தனை முறை 
விழுங்கினாலும்... 
விக்கித் தவிப்பதே இல்லை
அந்த கடல்.

* வாழ்த்து அட்டைகளைத்
தொலைத்துவிட்டு...
வாழ்த்துகளை 
சேகரித்துக் கொண்டிருக்கிறேன்
முகநூலில்.
- திருமலை சோமு

* தனக்கான வலையோடு 
அலைகிறான் ஒவ்வொருவனும்...
கலங்கிய குட்டையில் மீன்.
- முனியாண்டி ராஜ்

* பூமிக்குப் புன்னகைக்கத் தெரியும்...
ஆனால், 
அழவிடுகிறார்கள்
- நா.வே.அருள்

* பூனைகள் 
பகிரங்கமாக வாழ்கின்றன...
எலிகள் 
மறைந்து வாழ்கின்றன.
- யவனிகா ஸ்ரீராம்.

* இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும், மனதுக்குப் பிடித்தவரை மறக்காது.
காரணம்...
இதயத்திற்கு நடிக்கத் தெரியாது. துடிக்க மட்டும் தான் தெரியும்.
- பாரதி கவிதாஞ்சன்

சுட்டுரையிலிருந்து...
* நல்லவேளை 
நியூட்டன் இங்கிலாந்துல இருந்ததால
விஞ்ஞானி ஆனாரு... 
இந்தியாவுல இருந்திருந்தா... 
ஆப்பிள்மரம் 
போதி மரமாகியிருக்கும்...
நியூட்டன் புத்தனாகிருப்பார்.
- மோடுமுட்டி

* "நீயின்றி
நானில்லை'
என்பது எங்கள்
தலைமுறை காதல்...
"நானில்லை என்றால்
நீயுமில்லை 
காதலுமில்லை' 
என்பதே
இன்றைய காதல்! 
- காளையன்

* நம் முகத்தின் 
தோரணையைப் பார்த்தவுடன்
நாம் சோகத்தில் 
இருக்கிறோமா, 
அல்லது 
சந்தோசத்தில் இருக்கிறோமா
என்பதைக் கண்டறியும் 
கணினிதான் 
"நண்பன்'
- சக்திமான்

* மிக்ஸியை 
அரைக்க மட்டும் 
பயன்படுத்தாமல்...
வீட்டில் இருப்பவர்களை 
சீக்கிரம் எழுப்பவும் 
பயன்படுத்துவது,
பெண்களின் 
புத்திசாலித்தனம்.
- உங்கள்ஹபீப் 

வலைதளத்திலிருந்து...
தேவையெனும் போது மட்டும் உங்களை நாடுகிறார்களா?
வருத்தம் வேண்டாம்...
திடீரென இருள் சூழும் போது மெழுகுவர்த்தியைத் தானே தேடுகிறோம்?
வருத்தம் தவிர்... பெருமிதம் கொள்! 
உங்கள் மீது அக்கறை உண்டு என்பவரின் வார்த்தைகளை மட்டுமே 
கவனிக்காமல்...
மாறாக, அவர்கள் செயல்பாடுகளை உற்றுக் கவனியுங்கள்.
உன் சவால்களை கட்டுப்படுத்தாதே... கட்டுபாடுகளுக்கு நீ சவால் விடு!
பின் தட்டுப்படுவது எல்லாமே வெற்றி தான்.
http://visionunlimitedchennai.blogspot.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com