

புத்தகம் என்பது.. வெறும் பொழுதுபோக்குக்கான விசயமாக மட்டும் இருப்பதில்லை. புத்தகத்தை வாசிக்க வாசிக்க சிந்தனை பெருகுவதோடு, செயல்களும் தெளிவடைகின்றன. எனவே வளரவேண்டும், வாழ்வில் ஒரு உன்னத நிலையை எட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்ட அனைவரும் புத்தக வாசிப்பை தொடர்ந்து மேற்கொண்டால் நிச்சயம் வெற்றிப் பாதையை அடையலாம் என்பதில் ஐயம் இல்லை.
வாசிப்பின் நோக்கம்: புத்தகங்களைப் படிக்கப் தொடங்கும் முன், நாம் என்ன முயற்சியில் இருக்கிறோம்; நமக்கு எது தேவை என்பதைத் தெரிந்து கொண்டு அது தொடர்புடைய புத்தங்களை வாசிப்பது சிறந்தது. நாம் வாசிக்கும் புத்தகங்களின் உள்ளடக்கம் நம் வாழ்க்கையை மாற்றும் என்பது உறுதி.
நூல் ஒரு சிறந்த ஆசான் : வாசிப்பு என்பது ஒரு பழக்கமாக இருந்தால் அது நமக்கு நல்ல படிப்பினைகளைத் தருவதோடு நம்மை ஒரு அறிவிற் சிறந்த நபராகவும் ஆக்குகிறது. ஒரு வகுப்பறையில் கற்றுக்கொள்ளமுடியாத பல விசயங்களை ஒரு நூல் நமக்கு கற்றுத்தந்துவிடும்.
கற்பனைகளும் காட்சிப்படுத்துதலும்: சில புத்தகங்களை வாசிக்கும் போது அது நம்மோடு பேசும், சில விசயங்களைக் காட்சிப்படுத்தும் நம் கற்பனைகளை விரிவடையச் செய்யும். மேலும் பயனுள்ள ஆலோசனையின் ஒரு பகுதியை வாசிக்கும்போது, உண்மையில் அந்த விஷயத்தைச் செய்யத் தூண்டும்.
அமைதி மற்றும் புதிய அறிவைத் தரும் நூல்கள்: எதை நோக்கிய பாதையில் வளர்ச்சியடைய விரும்புகிறோம் என ஆராய்ந்து அதற்கேற்ற பாதையை தெரிவு செய்ய வேண்டும். வளர்ச்சி தானே நடக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். புதிய திறமைகளை கற்றல், அதிக பணத்தை சம்பாதித்து, ஒரு பெரிய உறவைக் கொண்டிருப்பது இவை அனைத்தும் கடின உழைப்பில் மட்டுமே கிடைக்கும். ஆனால் புத்தகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தால், அந்த வளர்ச்சியை நீங்கள் எளிதில் அடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.