காற்றில் இருந்து நீர்!

பூமியின் பெரும்பகுதி தண்ணீரால் சூழ்ந்து இருந்தாலும், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதில்லை.
காற்றில் இருந்து நீர்!

பூமியின் பெரும்பகுதி தண்ணீரால் சூழ்ந்து இருந்தாலும், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதில்லை. மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடினாலும், அதைச் சேமித்து வைக்கும் வசதியும் நம்மிடம் இல்லை.
 அடுத்த உலக போர் தண்ணீருக்காகத்தான் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு வரும் காலங்களில் ஏற்பட உள்ளது.
 தற்போதைய சந்ததியினர் தண்ணீர் தேவைகளைப் போராடி பூர்த்தி செய்து கொண்டாலும், அடுத்த சந்ததியினருக்கு தேவையான நீர் ஆதாரம் மிச்சமிருக்குமா என்பது கேள்வியாகத்தான் உள்ளது. இந்தக் கேள்விக்கு விடைகாணும் வகையில், அமெரிக்காவின் அக்ரான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், காற்றில் இருந்து நீர் எடுக்கும் சிறிய இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேட்டரியால் இயங்கும் இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 38 லிட்டர் நீரை காற்றில் இருந்து எடுக்க திட்டமிட்டுள்ளனர். மெல்லிய நானோ ஃபைபர்களைப் பயன்படுத்தி காற்றை தண்ணீராய் மாற்றும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில் அக்ரான் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலைவனப் பகுதியில் உள்ள காற்றில் இருந்தும்கூட தண்ணீரை எடுத்துவிடலாம் என்றும் இதற்கு சிறிது அளவே பேட்டரி மின்சாரம் தேவைப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த முறையில் சேகரிக்கப்படும் நீர் தூய்மையானது என்பதால், உடனடியாக அதை அருந்தியும் விடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீரை எடுக்க வீட்டிற்கு ஒரு மின் மோட்டார் வைத்திருக்கும் காலம்போய், காற்று நீர் மோட்டாரைப் பயன்படுத்தி அவரவர் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 - அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com