2019-ஆம் ஆண்டின் சிறந்த ஆப்கள்!

2019-ஆம் ஆண்டை கடந்து நாளை முதல் 2020-இல் அடியெடுத்து வைக்க உள்ளோம். 2008-இல் வெறும் 50 ஆப்களுடன் தொடங்கப்பட்ட கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது 20.8 லட்சத்துக்கும்
2019-ஆம் ஆண்டின் சிறந்த ஆப்கள்!

2019-ஆம் ஆண்டை கடந்து நாளை முதல் 2020-இல் அடியெடுத்து வைக்க உள்ளோம். 2008-இல் வெறும் 50 ஆப்களுடன் தொடங்கப்பட்ட கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது 20.8 லட்சத்துக்கும் மேல் ஆப்கள் உள்ளன. இவை நமக்கு பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமின்றி, தகவல் பரிமாற்றம், சுற்றுலா, டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும், கேம்களை விளையாடுவதற்கும் உதவுகின்றன. கடந்த ஆண்டை விட 2019 -இல் ஆப் பதிவிறக்கம் 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், 2019-ஆம் ஆண்டின் சிறந்த ஆப்களை கூகுள் பிளே ஸ்டோர் நிறுவனம் அறிவித்துள்ளது. 
இதில், சமூக வலைதள சிறந்த ஆப்பாக எப்லோவை (ABLO) கூகுள் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ளவர்களை இணைக்கும் இந்த ஆப்-இல் சாட்கள், வீடியோ கால்கள் உடனடியாக மொழி பெயர்ப்பு செய்யப்படுகின்றன. இதன் மூலம் பிற நாட்டு மொழி, கலாசாரம் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, தவறு செய்பவர்கள் உடனடியாக இந்த ஆப்பை விட்டு வெறியேற்றப்படுகின்றனர்.
விளையாட்டு ஆப் பிரிவில் கால் ஆப் டூட்டி (CALL OF DUTY) என்ற ஆப் சிறந்த ஆப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த விளையாட்டு ஆப்பை சுமார் 5 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
வீடியோ எடிட்டர் ஆப் பிரிவில் கிளிட்ச் (GLITCH) சிறந்த ஆப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட வீடியோ எபெக்ட்ஸ்களைக் கொண்ட இந்த ஆப்பை 1 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதேபோல், இசை ஆப் பிரிவில் ஸ்பாட்டிஃபை (SPOTFY) ஆப் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான இந்தியர்கள் இந்த ஆப்பிற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். 2020-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவைக் கொண்ட வியக்கத்தக்க ஆப்களை எதிர்பார்க்கலாம்.
-அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com