மத்திய அரசில் ஆசிரியர் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பணியாற்ற விரும்புவர்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்புவர்கள் மார்ச் - 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 
மத்திய அரசில் ஆசிரியர் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பணியாற்ற விரும்புவர்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்புவர்கள் மார்ச் - 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 
CENTRAL BOARD OF SECONDARY EDUCATION(CBSE) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ஆசிரியராக விரும்புபவர்கள் Central Teacher Eligibility Test (CTET) -இல் தேர்வு பெற வேண்டும். 
2019 -ஆம் ஆண்டுக்கான இந்த தகுதித் தேர்வு ஜூலை.7 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 5 -ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வுக் கட்டணத்தை 08-03-2019 மாலை 3.30.க்குள் செலுத்த வேண்டும்.
இரண்டு தாள்களைக் கொண்டது இத்தேர்வு. இந்தியா முழுவதும் 97 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது.தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் தேர்வு எழுதலாம். 
5 -ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும். ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ரூ. 700 கட்டணமும், இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ. 1200 கட்டணமும் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ. 350 கட்டணமும், இரண்டு தாள்களுக்கு ரூ. 600 கட்டணமும் செலுத்த வேண்டும்.விணணப்பிக்க விரும்புவோர் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் நுழைந்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
STEP1: Log on to CTET official website www.ctet.nic.in.
STEP2: Go to the link “Apply Online” and open the same.
STEP3: Fill in the Online Application Form and note down Registration No./Application No.
STEP4: Upload Scanned Images of latest Photograph and Signature
STEP5: Pay Examination Fee by e-challan or debit/creditcard
STEP6: Print Confirmation page for record and future reference.
தேர்வு நேரம்:
தாள்-1 : 09.30 AM TO 12.00 PM 2.30 மணி நேரம்
தாள் -2 : 02.00 PM TO 04.30 PM 2.30 மணி நேரம். 
வி.குமாரமுருகன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com