செயற்கை நுண்ணறிவு... மாற்றம்... கல்விமுறையில்!

​இளைஞர்களிடையே அதிக அளவில் புழங்கிக் கொண்டிருக்கும் சொல் தான் செயற்கை நுண்ணறிவு(ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்). மனித சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு... மாற்றம்... கல்விமுறையில்!
Updated on
2 min read


இளைஞர்களிடையே அதிக அளவில் புழங்கிக் கொண்டிருக்கும் சொல் தான் செயற்கை நுண்ணறிவு(ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்). மனித சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் செயற்கை நுண்ணறிவு, எல்லாத் துறைகளிலும் கால்பதிக்கத் தொடங்கிவிட்டது. 

தானியங்கி முறையில் காசோலையை வங்கியில் செலுத்துவது, தானியங்கி வாகன நிறுத்த மேலாண்மை, செய்திப் பகிர்வு, சமூகவலைதள தகவல் அல்லது செய்தி பகிர்வு... இப்படி நமது தினசரி வாழ்க்கையில் கையாளும் பல்வேறு சேவைகளில்,  தொழில்நுட்பங்களில் செயற்கை நுண்ணறிவு பங்காற்ற தொடங்கிவிட்டது. அந்தவகையில் கல்விமுறையில் நுழைந்துள்ள செயற்கை நுண்ணறிவு, புதியவடிவில் கல்வி முறையைக் கட்டமைக்கத் தொடங்கிவிட்டது.

கரோனா தொற்று  காலகட்டத்தில் கல்விமுறையில் புதிய தொழில்நுட்பங்கள், அணுகுமுறைகள் தென்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு, கல்விமுறையைஅடுத்த கட்டவளர்ச்சிக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. 

கற்பித்தலும் கற்றலும் நிகழக் கூடிய வகுப்பறைக்குள்ளும் செயற்கை நுண்ணறிவு நுழைந்துவிட்டது. அதன்விளைவாக, பாட உள்ளடக்கம் மட்டுமல்ல, கல்வி வளாகங்களும் மாறிவருகின்றன. வகுப்பறைகளில் நடக்கும் கலந்துரையாடல்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்தவையாகிவிட்டன. மாணவர்களின் கற்றல் திறனாய்வு, கற்பித்தல் திறன் மேம்பாடு போன்றவற்றிலும் செயற்கை நுண்ணறிவு தடம் பதிக்கத் தொடங்கிவிட்டது.

இணையவழிக் கற்றல்:

கடந்த சில மாதங்களாகவே கல்விமுறையில் புகுந்துள்ள இணையவழி கற்பித்தல்-கற்றல், நிலையான கல்வியாக மாறி வருகிறது. கல்லூரிகளில் நேரடி வகுப்பு தவிர, இணையவழி பாடத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு கோடி மாணவர்கள் இணையவழிக் கல்வி பெறுவார்கள் என்று ஓர் ஆய்வு  தெரிவிக்கின்றது. இணையவழிக் கல்வியின் அடிப்படையாக இருப்பதே செயற்கை நுண்ணறிவு தான். இது உயர்தர கல்விக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வியால் ஊரக மாணவர்களையும் உயர்தர கல்வி வரம்புக்குள் கொண்டு வர முடியும் என்று பெரும்பாலான வளரும் நாடுகள் நினைக்கத் தொடங்கியுள்ளன.

முக அடையாளம் கண்டுணர்தல்:

கல்லூரியில் நுழையும் மாணவர்களின் முகங்களை ஸ்கேன் செய்து, அவரின் முகவெட்டைக் கண்டுணர்ந்து அவரது அடையாளத்தை உறுதி செய்யும் முறையை சீனா ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. 

இதனால் மாணவர்களுக்கு அடையாள அட்டை தேவைப்படாது. வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவரின் நடவடிக்கையை 30 விநாடிகளுக்கு ஒருமுறை சோதித்து, அம்மாணவர் பாடத்தை கவனிக்கிறாரா? என்ற தகவலை ஆசிரியருக்கு அளிக்க முடியும். இது வகுப்பறையின் போக்கை மாற்றிவிடும் ஆற்றல் வாய்ந்தது.

ஸ்மார்ட் பாட உள்ளடக்கம்: கிளவுட் தளத்தின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மென்பொருள் வாயிலாக இணையவழி கல்வி முறை இயக்கப்படுகிறது. வழக்கமான பாடப் புத்தகங்களைக் காட்டிலும், புதுமையான, கருத்து பரிமாற்றத்திற்கு உகந்த ஸ்மார்ட் பாட உள்ளடக்கம் கல்வி மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கிறது. பிளாஷ் கார்டுகள், அத்தியாயங்களின் சுருக்கம், மாறுபட்ட கேள்விகள்... பாடத்தைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டுதல்கள் என்று ஸ்மார்ட் பாட உள்ளடக்கம், கற்றலின்போக்கையே மாற்றப் போகிறது. பாடங்களை மாணவர்கள் புரிந்து கொண்டதைச் சோதிக்க பயிற்சிகள், செய்முறைகள், கருத்துப் பரிமாற்றங்கள், சுய மதிப்பீடு என்று கல்விமுறையை செயற்கை நுண்ணறிவு கலக்கப்  போகிறது.

கற்பித்தல் நுட்பம்:

வகுப்பறையில் பாடம் நடத்தும் மனித ஆசிரியரின் பங்களிப்பை எவ்வகையில் செயற்கை நுண்ணறிவால் மாற்றி விட முடியாது என்றாலும், அவரின் கற்பித்தல் திறனை மேம்படுத்த முடியும். மனித ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களுக்குத் தேவையான புதுமையான கல்வி உலகத்தை செயற்கை நுண்ணறிவால் வழங்க இயலும். இம்முறையில் மாணவர்கள் விரைவாக, துல்லியமாக பாடங்களைக் கற்றறிய முடியும். தொழில்நுட்பத்தின் உதவியால் மாணர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்ட முடியும். அதேபோல, கற்பதற்கான பாதையை புதுமையானதாக மாற்றக் கூடியது தான் செயற்கை நுண்ணறிவு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com